த.வெ.க., சார்பில் 30ம் தேதி மாணவர்களுக்கு பாராட்டு விழா
த.வெ.க., சார்பில் 30ம் தேதி மாணவர்களுக்கு பாராட்டு விழா
UPDATED : மே 27, 2025 12:00 AM
ADDED : மே 27, 2025 03:47 PM
சென்னை:
சட்டசபை தொகுதி வாரியாக, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக 30ம் தேதி, மாமல்லபுரத்தில் பாராட்டு விழா நடக்கிறது.
இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். பெற்றோர் முன்னிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.