பொருட்களை கொண்டு செல்லும் லிப்ட் மேலுார் இரட்டையர்கள் அசத்தல்
பொருட்களை கொண்டு செல்லும் லிப்ட் மேலுார் இரட்டையர்கள் அசத்தல்
UPDATED : ஏப் 12, 2024 12:00 AM
ADDED : ஏப் 12, 2024 10:57 AM

மேலுார்:
திருமண மண்டபங்கள், கட்டட பணிக்கான பொருட்களை மாடிகளுக்கு கொண்டு செல்லும் 'லிப்ட்'டை மேலுார் இரட்டையர்களான பாலசந்தர், பாலகுமார் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் பொறியியல் கல்லுாரியின் 3ம் ஆண்டு மாணவர்களான இவர்கள், ஏற்கனவே தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல், புரோட்டா தயாரிக்கும் இயந்திரம், தேங்காய் பிரித்தெடுக்கும் இயந்திரம், கிரானைட், மார்பிள் கற்களை வெட்டும் இயந்திரங்களை கண்டு பிடித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
திருமண மண்டபங்கள், கட்டடங்களில் பொருட்களை கொண்டு செல்ல ஆட்களின் தேவை அதிகரித்துள்ளது.
நேரம், பணம் அதிகம் செலவாகிறது. இதை தவிர்க்க 1.5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார், கியர் பாக்ஸ், தேவைக்கு தகுந்த இடத்தில் நிறுத்துவதற்கு சுவிட்ச், இரும்பு கம்பியை கொண்டு எளிமையான முறையில் ஒரு டன் வரை பொருட்கள் கொண்டு செல்லும் 'லிப்ட்'டை உருவாக்கியுள்ளோம்.
இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம்.
இவ்வாறு கூறினர்.
தொடர்புக்கு 99444 37098.