தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுவதும் கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பு

நாடு முழுவதும் கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பு

நாடு முழுவதும் கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பு


UPDATED : ஏப் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் ஒரே காலத்தில் திறக்கப்பட வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.



 


நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பலவிதமான கால அட்டவணையைக் கடைப்பிடிப்பதால், ஒரு கல்வி நிறுவனத்தில் படித்து முடிக்கும் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள தொழில் கல்வி நிலையங்கள் தவிர மற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் ஒரே மாதிரி கால அட்டவணையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் மாநிலக் கல்வித்துறைச் செயலர்களும் பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் எழுதியுள்ளது.



இதன்படி, பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட வேண்டும். இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை கடைசி வாரத்துக்குள் தொடங்கப்பட வேண்டும். எனவே, செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us