sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2028க்குள் நிலவுக்கு வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா: அதிபர் டிரம்ப்

/

2028க்குள் நிலவுக்கு வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா: அதிபர் டிரம்ப்

2028க்குள் நிலவுக்கு வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா: அதிபர் டிரம்ப்

2028க்குள் நிலவுக்கு வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா: அதிபர் டிரம்ப்


UPDATED : டிச 21, 2025 12:51 PM

ADDED : டிச 21, 2025 12:54 PM

Google News

UPDATED : டிச 21, 2025 12:51 PM ADDED : டிச 21, 2025 12:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் இலக்குகளை துரிதப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.

நிலவுக்கான லட்சிய ஆய்வுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, புதிய நிர்வாக உத்தரவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

இதில், 2028க்குள் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்வது; 2030க்குள் நிலவில் ஒரு நிரந்தர கண்காணிப்பு மையம் அமைப்பது; செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப பணிகளை துவங்குவது உள்ளிட்டவை அடங்கும்.

புதிய நிர்வாக உத்தரவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

விண்வெளி பாதுகாப்பை முன்னுரிமையாக்குதல்

வரும் 2028க்குள் விண்வெளி சந்தையில், 4.50 லட்சம் கோடி ரூபாயை புதிய முதலீடாக ஈர்க்க இலக்கு

அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுகணை தடுப்பு அமைப்புகளை உருவாக்குதல்; விண்வெளி அச்சுறுத்தல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்

வரும் 2030க்குள் ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பதிலாக ஒரு வணிக ரீதியிலான விண்வெளி நிலையத்தை உருவாக்குதல்

நிலவில் சூரிய ஒளி கிடைக்காத நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க, அதன் மேற்பரப்பில் அணுசக்தி வாயிலாக இயங்கும் அமைப்புகளுக்கு அனுமதி.

'அமெரிக்க அரசின் இத்திட்டம் மிக பிரமாண்டமானது. எனினும், இதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்பம் பெரிய சவாலாக உள்ளது' என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவில் தளம் அமைக்க போட்டியிடும் சூழலில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு விண்வெளி போட்டியை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த 1972 டிசம்பரில் நிலவுக்கு அனுப்பப்பட்ட, 'அப்பல்லோ 17'ன் பயணத்துக்கு பின், அரை நுாற்றாண்டு கழித்து, அமெரிக்க வீரர்கள் மீண்டும் நிலவில் கால் பதிக்கவுள்ளனர்.

அங்கேயே தங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் எடுத்துள்ள முடிவு, விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்தை குறிக்கிறது. மேலும், செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான ஒரு முன்னோட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஏற்படும் நன்மை:

இந்தியாவின், 'ககன்யான், சந்திரயான் - 4' போன்ற திட்டங்களை விரைவுபடுத்த இந்த அறிவிப்பு துாண்டுகோலாக இருக்கும்

கடந்த, 2023ல், 'ஆர்டெமிஸ்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதால், அமெரிக்காவின் இந்த உத்தரவு இந்திய விண்வெளி துறைக்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கும் புதிய கதவுகளை திறக்கும்.

இந்திய விண்வெளி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.






      Dinamalar
      Follow us