பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
ADDED : அக் 10, 2025 10:22 PM

ணிலா: பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியன்டல் பகுதியில் உள்ள மனய் நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 எனப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 7 மணிநேரம் கழித்து, மீண்டும் அதே பகுதிக்கு சக்தி வாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியது. இதனால், வீடுகள் மற்றும் உயரமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் அரசு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.