6 மாவட்டங்களில் சொட்டு மருந்து முகாம்: 7.82 லட்சம் குழந்தைகள் பயன்
6 மாவட்டங்களில் சொட்டு மருந்து முகாம்: 7.82 லட்சம் குழந்தைகள் பயன்
ADDED : அக் 13, 2025 06:07 AM

சென்னை: செங்கல்பட்டு உட்பட ஆறு மாவட்டங்களில், நேற்று போலியா சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில், 7.82 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில், 7,091 மையங்களில், நேற்று போலியோ சொட்டு மருந்து, சிறப்பு முகாம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை நகர்ப்புற துணை சுகாதார நிலையத்தில்நடந்த முகாமில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.
அதன்பின் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 29 ஆண்டுகளாக, போலியோ சொட்டு மருந்து முகாம், நடந்து வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக, போலியோ இல்லாத மாநி லமாக தமிழகம் உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம், போலியோ வைரஸ் பரவல் நாடுகள் பட்டியலில் இருந்து, இந்தியாவை நீக்கி, 2014ம் ஆண்டு, போலியோவில் இருந்து, விடுபட்ட நாடாக இந்தியாவை அறிவித்தது.
கடந்த 11 ஆண்டுகளாக போலியோ இல்லாத நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று நடந்த சிறப்பு முகாம் வாயிலாக, 7 லட்சத்து 82,709 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2 லட்சத்து 31,281; மயிலாடுதுறையில் 62,363 ; சிவகங்கையில் 1 லட்சத்து 1,995 ; தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 59,388 ; திருநெல்வேலி ஒரு லட்சத்து 11,796 ; விருதுநகர் 1 லட்சத்து 15,886 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.