sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்கானிஸ்தான்: பெண் நிருபர்களை அழைத்து மீண்டும் கூட்டம்

/

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்கானிஸ்தான்: பெண் நிருபர்களை அழைத்து மீண்டும் கூட்டம்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்கானிஸ்தான்: பெண் நிருபர்களை அழைத்து மீண்டும் கூட்டம்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்கானிஸ்தான்: பெண் நிருபர்களை அழைத்து மீண்டும் கூட்டம்


ADDED : அக் 12, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானதால், நேற்று மீண்டும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை அவர் நடத்தினார். இதில், பெண் நிருபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் 'நேட்டோ' படைகள் வெளியேறிய நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

இதையடுத்து, காபூலில் இயங்கி வந்த துாதரகத்தை நம் நாடு மூடியது. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை நம் நாடு செய்து வருகிறது. இதனால், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான துாதரக உறவு வலுவடைந்தது.

இந்நிலையில், ஆறு நாள் பயணமாக நம் நாட்டிற்கு வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தின்போது பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

ஆப்கானிஸ்தானை போல, இங்கும் பாலின பா குபாட்டை செயல்படுத்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி முயற்சிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஆப்கன் துாதரகம் வாயிலாகவே பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என, மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பெண் நிருபர்களை அழைத்து அமீர்கான் முத்தகி நேற்று மீண்டும் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தின்போது பெண் நிருபர்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறித்து அமீர்கான் முத்தகி விளக்கம் அளித்தார்.

தொழில்நுட்ப தவறு!

டில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் துாதரகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு, பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படாததில் சிறிய தொழில்நுட்பத் தவறு நடந்து விட்டது. குறைந்த அவகாசத்துக்குள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. திட்டமிட்டு, பெண் பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்படவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆப்கனில், 28 லட்சம் பெண்கள் கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர். பெண்கள் கல்வி கற்பதற்கு மத ரீதியாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை. - அமீர்கான் முத்தகி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்



ஆப்கன் துாதருக்கு பாக்., 'சம்மன்'

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப் பற்றிய பின், முதல் முறையாக அந்நாட்டைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி டில்லிக்கு வந்தார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், பஹல்காம் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்தும் விபரங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்னை என்றும், பயங்கரவாத செயலுக்காக தங்களது மண்ணை பயன்படுத்திக் கொள்வதற்கு ஆப்கன் அரசு அனுமதிக்காது என்றும் அமீர்கான் மு த்தகி திட்டவட்டமாக கூறியிருந் தார். இந்த கூட்டறிக்கையால் எரிச்சல் அடைந்துள்ள பாகிஸ்தான், தங்கள் நாட்டில் உள்ள ஆப்கன் துாதரை அழைத்து ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என கூறுவது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறிய செயல் என்றும் கண்டித்து உள்ளது. துாதரக ரீதியிலான உறவுகளில் தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் இப்படி உரத்த குரல் எழுப்புவதாகவும், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என்பதை மற்றொரு நாடு அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நம் நாடு பதிலடி கொடுத்துள்ளது.








      Dinamalar
      Follow us