நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ADDED : அக் 07, 2025 02:25 AM

விசாகப்பட்டினம்: நம் கடற்படைக்கு முதலாவதாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ்., அர்னாலா, கடந்த ஜூன் மாதம் நம் படையில் இணைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்த விழாவில், கிழக்கு கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெண்டார்கர் பங்கேற்று, இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐ.என்.எஸ். ஆண்ட்ராத் என்ற கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
மொத்தம், 253 அடி நீளம் உடைய இந்த கப்பல், 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு பொருட்களுடன் கட்டமைக்கப் பட்டது.
நம் சுயசார்பு நோக்கத்தில் இது மற்றுமொரு மைல்கல். ஆண்ட்ராத் கப்பல் வாயிலாக, நம் கடற்பரப்பின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன், எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.