sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு 1654 எம்.எல்.ஏ.,க்கள்

/

நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு 1654 எம்.எல்.ஏ.,க்கள்

நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு 1654 எம்.எல்.ஏ.,க்கள்

நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு 1654 எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : நவ 18, 2025 02:59 AM

Google News

ADDED : நவ 18, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாடு முழுதும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 1,654 ஆக அதிகரித்துள்ளது.

1951ல் துவங்கப்பட்ட ஜன சங்கம், 1977ல் ஜனதா கட்சியுடன் இணைந்து, 1980ல் பா.ஜ.,வாக மாறியது. இந்திரா இருக்கும் வரை, சில எம்.பி.,க்கள், சில எம்.எல்.ஏ.,க்களை பெறவே பா.ஜ.,

கஷ்டப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த, 1989க்கு பின், வளர்ச்சியின் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பா.ஜ., இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், இப்போது நாட்டிலேயே மிகப்பெரிய கட்சியாக உள்ளது. 2014, 2019, 2024 என, தொடர்ந்து மூன்று லோக்சபா தேர்தல்களில் வென்று, 12வது ஆண்டாக ஆட்சியில் உள்ளது.

தற்போது, பா.ஜ.,வுக்கு லோக்சபாவில் 240, ராஜ்யசபாவில் 103 என, 343 எம்.பி.,க்கள் உள்ளனர். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் ஆண்ட காங்கிரசுக்கு, லோக்சபாவில் 99, ராஜ்யசபாவில் 27 என, 126 எம்.பி.,க்களே உள்ளனர்.மேலும், பா.ஜ.,வுக்கு 28 மாநிலங்கள், ஜம்மு -- காஷ்மீர், டில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1,654 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றது. 101 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 89ல் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதனால், நாடு முழுதும் பா.ஜ,, - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 1,654 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக உ.பி., 258, ம.பி., 165, குஜராத் 162, மஹாராஷ்டிரா 131, ராஜஸ்தான் 118, ஒடிஷா 79, மேற்கு வங்கம் 65, கர்நாடகா 63 என, பா.ஜ.,வுக்கு எம்.எல்.ஏ.,க்கள்

உள்ளனர்.

யூனியன் பிரதேசமான ஜம்மு - -காஷ்மீர் 29, டில்லியில் 48, புதுச்சேரியில் ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, மஹாராஷ்டிரா, உ.பி., - ம.பி., குஜராத், ராஜஸ்தான், ஒடிஷா, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும், டில்லி யூனியன் பிரதேசத்திலும் பா.ஜ., முதல்வர்கள் உள்ளனர். பீஹார், ஆந்திரா, புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

2014ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தபோது, பா.ஜ.,வுக்கு 1,035 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அது, 2015ல் 997 ஆக சரிந்தது. அதன் பின் மெல்ல மெல்ல அதிகரித்து, 2023ல் 1,441, 2024ல் 1,588 ஆக அதிகரித்தது. கடந்த 11 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 619 அதிகரித்து, இப்போது 1,654 ஆக உள்ளது.பா.ஜ.,வுக்கு அடுத்து, நாடு முழுதும் காங்கிரசுக்கு 640, திரிணமுல் காங்கிரசுக்கு 230, தி.மு.க.,வுக்கு 140, தெலுங்கு தேசம் கட்சிக்கு 135, ஆம் ஆத்மி கட்சிக்கு 122, சமாஜ்வாதி கட்சிக்கு 107, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 79 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இந்தியாவில் அதிக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பா.ஜ., உலக அளவில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாகவும் உள்ளது.






      Dinamalar
      Follow us