வளர்ச்சிக்கு இந்தியா காட்டிய பாதை: பிரிட்டன் இளவரசர் பாராட்டு
வளர்ச்சிக்கு இந்தியா காட்டிய பாதை: பிரிட்டன் இளவரசர் பாராட்டு
ADDED : நவ 16, 2026 06:58 PM

மும்பை:பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் 3 நாள் பயணமாக இந்தியா வந்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பான எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.
இவ்விழாவில் வில்லியம் பேசியதாவது:
சுமார் 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 50 மடங்குக்கும் மேல் வளர்ந்துள்ளது. இதனால், புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றானவற்றில் இருந்து 50 சதவீதம் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா எட்டிவிட்டது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்பு வளர்ச்சி, சுற்றுச்சூழல், செழிப்பு அல்லது பாதுகாப்பு என்ற தவறான தேர்வுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், வளர்ச்சியில் இந்தியா வித்தியாசமான பாதையை காட்டி உள்ளது.
தவறை சுட்டிக்காட்டுபவர்களால் இனி வரும் காலம் மாறாது. மாறாக, எது சாத்தியம் என்பதை காட்டும் நபர்களால் உலகம் மாறும். இவ்வாறு வில்லியம் பேசினார்.
