sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: தமிழகத்திற்கு கர்நாடகா ஆதரவு

/

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: தமிழகத்திற்கு கர்நாடகா ஆதரவு

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: தமிழகத்திற்கு கர்நாடகா ஆதரவு

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: தமிழகத்திற்கு கர்நாடகா ஆதரவு

1


ADDED : மார் 04, 2026 03:15 AM

Google News

1

ADDED : மார் 04, 2026 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்' என, தமிழக அரசு எடுக்கும் முயற்சியை பாராட்டுவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய, உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு அளித்த அறிக்கையின் பகுதி -1ஐ, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம், 20ம் தேதி அனுப்பி வைத்தார். அறிக்கையில் உள்ளபடி, 'அரசியலமைப்பு திருத்தம்' தொடர்பான விஷயத்தை முன்வைத்து கடிதமும் எழுதி இருந்தார்.

இந்த கடிதத்திற்கு சித்தராமையா எழுதி உள்ள பதில் கடிதம்: கூட்டாட்சி என்பது அரசியல் கோரிக்கை அல்ல; அது, நம் அரசியலமைப்பு அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி. பல ஆண்டுகளாக நிதி மற்றும் சட்டசபை தொடர்பான விஷயங்களில் அதிகரித்து வரும் பிரச்னை, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கற்பனை செய்த சமநிலையை சீர்குலைத்து உள்ளது.

இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்து வதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட, கர்நாடகா தயாராக உள்ளது. மாநில சுயாட்சிக்காக, 'அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்' என்று, தமிழக அரசு எடுக்கும் முயற்சியை பாராட்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

ஸ்டாலின் பாராட்டு


கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்: பன்முகத்தன்மை கொண்ட, இந்திய குடியரசின் ஒற்றுமையை, ஒற்றை தன்மை கொண்டு நிலைக்க செய்ய முடியாது. அரசியலமைப்பின் வழி யிலான நம்பகத்தன்மை வாயிலாகவே, அதனை செய்ய இயலும் என, தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்து மிக சரியானது என, ஆமோதிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us