தமிழகத்தில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அசாம் மாநிலத்திலும் துவக்க உத்தரவு
தமிழகத்தில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அசாம் மாநிலத்திலும் துவக்க உத்தரவு
UPDATED : நவ 17, 2025 05:55 PM
ADDED : நவ 17, 2025 05:32 PM

புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணியை, அசாம் மாநிலத்திலும் துவக்க தேர்தல் கமிஷன் இன்று அதிகாரபூர்வமாக உத்தரவிட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருக்கும் மாநிலங்களில் அசாம் மாநிலமும் ஒன்று. வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய பலர் அந்த மாநிலத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பட்டியலில் தான் தற்போது அசாம் மாநிலமும் சேர்ந்துள்ளது.அசாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்களை பிறப்பித்து இருக்கிறது. அதன்படி சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள மாநிலத்திற்கு ஜனவரி 1ம் தேதி 2026ம் ஆண்டு தகுதி தேதியாக இருக்கும் என்றும் கூறி உள்ளது.

