உறுப்பினர் அட்டையை வீசிய திமுக முன்னாள் எம்எல்ஏ.,: அறிவாலயத்தில் பரபரப்பு
உறுப்பினர் அட்டையை வீசிய திமுக முன்னாள் எம்எல்ஏ.,: அறிவாலயத்தில் பரபரப்பு
ADDED : டிச 10, 2025 04:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் திமுக முன்னாள் எம்எல்ஏ., உறுப்பினர் அட்டையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவை சேர்ந்த திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் இன்று திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு வந்தார். அவர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அங்கிருந்த காவலர்கள் அனுமதி மறுத்ததால், தனது உறுப்பினர் அட்டையை துாக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோபமடைந்த முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதிக்க மறுக்கிறீர்களா என்று ஆவேசம் அடைந்தார். இந்த தகவல் அப்பகுதியில் பரவிய நிலையில், பின்னர், ஆடலரசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

