ADDED : அக் 13, 2025 10:50 PM

கெய்ரோ: காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து போட்டார்.
இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.
டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இதில் பங்கேற்பதற்காக டிரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்