உள்ளடக்கத்திற்கு செல்ல

நிதிஷ்குமாரை சந்தித்தது மகிழ்ச்சி; நெகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்ட பிரதமர் மோடி
நிதிஷ்குமாரை சந்தித்தது மகிழ்ச்சி; நெகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்ட பிரதமர் மோடி
ADDED : நவ 21, 2026 04:36 PM

அ நிறம் | அளவு
பிரதமர் மோடி, இன்று (நவ.21) பீஹார் சென்றார். அங்கு வைஷாலி கங்கை ஆற்றின் குறுக்கே நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ரூ.34,470 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வுக்காக பீஹார் சென்ற பிரதமர் மோடி பாட்னா விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது அங்கு முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாரை அவர் சந்தித்தார். சந்திப்பு குறித்து தமது மகிழ்ச்சியை பிரதமர் மோடி எக்ஸ் வலை தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில், பாட்னா விமான நிலையத்தில் நிதிஷ்குமாரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ மிகுதியில் இருவரும் பரஸ்பரம் பேசி மகிழ்ந்து கொள்ளும் போட்டோக்களையும் பிரதமர் மோடி தனது பதிவில் பகிர்ந்து உள்ளார்.
