இன்று நீலகிரி, கோவைக்கு... நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
இன்று நீலகிரி, கோவைக்கு... நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ADDED : நவ 05, 2026 02:45 PM

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று(நவ.,5) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (நவம்பர் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி
* திண்டுக்கல்
* மதுரை
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
மிதமான மழை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலியில் நாளை (நவம்பர் 06) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 7) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தீபாவளியன்று நவம்பர் 8ல்...
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* கன்னியாகுமரி
ஆகிய 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* தஞ்சாவூர்,
* திருவாரூர்,
* நாகை,
* ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
* தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரி இடங்களில் நவம்பர் 11ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
