பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா விஞ்சும்: கணித்து கூறிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்!
பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா விஞ்சும்: கணித்து கூறிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்!
ADDED : அக் 29, 2025 10:14 PM

சிங்கப்பூர்: சீன பொருளாதாரத்தை விரைவில் இந்தியா விஞ்சும் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லுாங் கணித்துள்ளார்.
சிங்கப்பூரில் சாத்தம் ஹவுஸில் லீ சியன் லுாங் பேசியதாவது:ஆசியாவில் பெரும் அதிகார மாற்றம் ஏற்படும். இந்தியா எழுச்சி பெறுகிறது, சீனா சுருங்குகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட விரைவில் சீனாவின் பொருளாதாரத்தை விஞ்சக்கூடும். சீனாவின் மக்கள் தொகை சுருங்கியநிலையில், இந்தியா இளமையாகவும் வளர்ச்சி வேகத்துடன் நிறைந்து காணப்படுகிறது.
ஆர்சிஇபி போன்ற பிராந்திய வர்த்தகக் குழுக்களில் இந்தியாவின் எதிர்கால பங்கேற்பு ஆசியாவில் பொருளாதார சக்தி சமநிலையை வியத்தகு முறையில் மாற்றும்.
உலகளாவிய ஜாம்பவான்கள் விநியோகச் சங்கிலிகள், மறுசீரமைப்பு முதலீடு பீஜிங்கை விட்டு விலகும் நிலையில், புதுடில்லி, உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த பெரிய காந்தமாக உருவாகி வருகிறது.இவ்வாறு லீ சியன் லுாங் பேசினார்.

