கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து; தொடரை வென்றது இந்தியா
கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து; தொடரை வென்றது இந்தியா
UPDATED : நவ 08, 2025 05:10 PM
ADDED : நவ 08, 2025 05:00 PM

பிரிஸ்பேன்: ஆஸி.,க்கு எதிரான கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3, 4வது போட்டியில் போட்டியில் வென்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணியின் கேப்டன் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்திய அணியை பொறுத்தவரையில் திலக் வர்மாவுக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் இடம்பெற்றார்.
வழக்கம் போல துவக்க வீரர்களாக கில் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். 4.5 ஓவர்களில் 52 ரன்னை எட்டிய போது, மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அபிஷேக் 23 ரன்னுடனும், கில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரமாக மழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா 11 ரன்னை எட்டிய போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் வேகமாக (528 பந்துகளில்) 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

