sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை முதல்வர் நடத்திய கிராமசபையில் அம்பலம்

/

பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை முதல்வர் நடத்திய கிராமசபையில் அம்பலம்

பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை முதல்வர் நடத்திய கிராமசபையில் அம்பலம்

பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை முதல்வர் நடத்திய கிராமசபையில் அம்பலம்


ADDED : அக் 13, 2025 12:14 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பல ஊராட்சி களில் இணையதள வசதி இல்லாதது, முதல்வர் நடத் திய கிராமசபை கூட்டத்தில் அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தில், 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உட்பட, ஆறு நாட்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அப்போது தான், மத்திய அரசின் நிதி மானியம் ஊராட்சிகளுக்கு கிடைக்கும். அதன்படி, தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 2ல் நடக்க வேண்டிய கிராமசபை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 12,480 ஊராட்சிகளில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை, பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி போன்று நடத்தவும் திட்டமிடப்பட்டது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம்; தென்காசி முள்ளிக்குளம்; கோவை வாரப்பட்டி; விழுப்புரம் கொண்டாங்கி; தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

'டான்பினெட்' எனப்படும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் வாயிலாக, இணையசேவை வழங்கப்பட்ட, 10,000 ஊராட்சிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இணையதள வசதி இல்லாதது, இணைப்பில் பிரச்னை, மின்தடை உள்ளிட்ட காரணங்களால், 1,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், முதல்வரின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இணைய சேவை வழங்கும் பணிகள் முழுமை அடையாததால், முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தை முழுமையாக ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், 11,800 ஊராட்சிகளில், 'டான்பினெட்' வாயிலாக, இணைய சேவை வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணி முடிக்கப்பட்ட, 10,000 இடங்களில் மட்டுமே, கிராமசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அடுத்த முறை கிராமசபை கூட்டம் நடக்கும் போது, அனைத்து ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து, நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையில், இணைய சேவை இணைப்பு பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us