அடுத்து துரைமுருகன்: மணல் குவாரி முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு
அடுத்து துரைமுருகன்: மணல் குவாரி முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு
ADDED : நவ 06, 2026 07:18 PM

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அத்துறை வெளியிட்ட அறிக்கை: 2021 முதல் 2024 வரை 28 குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணிகளில் ஊழல் நடந்தது. விசாரணைக்கு எடுத்த 4 குவாரிகளில் மணல் கொள்ளை வாயிலாக ரூ.1,427 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் குற்றத்தை நிரூபிக்கும் 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள், 3 வங்கி லாக்கர்கள் சிக்கின.
அமலாக்கத்துறை, அறப்போர் இயக்கத்திடம் இருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது.
துரைமுருகனுடன், ஓய்வு பெற்ற முதன்மை தலைமை பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி, நீர்வளத்துறை செயலர் மற்றும் 14 தனியார் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலம் ஆகி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷ், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் நேரு மீது விசாரணை நடந்து வருகிறது. ஏரியில் சட்ட விரோதமாக மண் அள்ளிய ஊழல் மீதான வழக்கில் எ.வ.வேலு மீது விசாரணை நடக்கிறது. தற்போது துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
