sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'டாஸ்மாக்' பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்  

/

 'டாஸ்மாக்' பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்  

 'டாஸ்மாக்' பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்  

 'டாஸ்மாக்' பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்  

3


ADDED : மார் 08, 2026 12:34 AM

Google News

3

ADDED : மார் 08, 2026 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மது கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், சென்னை எழும்பூரில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, போராட் டக் குழுவினர் கூறியதாவது :

மது கடைகளில் பணியாளர்கள், 2003 முதல், 23 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது தான் எங்களின் கோரிக்கை.

இதுகுறித்து, அரசு உயரதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, அதன் அறிக்கையை பெற்று முடிவு எடுப்பதாக, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஆனால், அதை வெளியிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் துவங்க உள்ளதால், போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். தேர்தல் முடிந்து, புதிய முதல்வர் பதவியேற்பு நாளில் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருவாய் துறை சங்கம்


கிராம உதவியாளர்கள் தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, போராடி வரும் கிராம உதவியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சங்கத்தினர், வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் தற்செயல் விடுப்பு எடுத்து, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மகப்பேறு மருத்துவர்கள்


அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை அறிக்கை:

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், எம்.ஆர்.பி., வாயிலாக, சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதற்கு முன்பாக, கடந்த வாரம், மருத்துவர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. ஆனால், மகப்பேறு துறையில், 57 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தும், கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இதுகுறித்து, கோரிக்கை விடுத்தும், மருத்துவக் கல்லுாரி இயக்குநர், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மகப்பேறு மருத்துவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

மேலும், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தை பிரிவில், டி.எம்., படிப்பு படித்த, உயர் சிறப்பு மருத்துவர் பணியிடங்களை உருவாக்குவதற்காக, ஏற்கனவே இருக்கும் குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைப்பதாக, அரசு உத்தரவிட்டுள்ளது.

இது, அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். மேலும், குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணியாளர்களுக்கு மே மாதம் ஊதியம் உயர்வு புதிய மருத்துவ அலுவலர்கள், உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. 115 மருத்துவ அலுவலர்கள், 83 கண் மருத்துவ உதவியாளர்கள், 75 ஆய்வக நுட்புநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: மருத்துவ பணியாளர் தேர்வாணையம் எனும், எம்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை, வரும் 11ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஊதிய உயர்வு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, 41,000 ஒப்பந்த பணியாளர்களுக்கு வரும் மே மாதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு கூடுதலாக 169 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அதேபோல, ஆஷா பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us