தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்றிரவு கரையை கடக்கும் முரசு புயல்; தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் ஆந்திராவுக்கு உதவிக்கரம்!

இன்றிரவு கரையை கடக்கும் முரசு புயல்; தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் ஆந்திராவுக்கு உதவிக்கரம்!

இன்றிரவு கரையை கடக்கும் முரசு புயல்; தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் ஆந்திராவுக்கு உதவிக்கரம்!

2


ADDED : நவ 02, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : நவ 02, 2026 08:18 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

நெல்லூருக்கு தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், நெல்லூர் - நரசாப்பூர் இடையே இன்று இரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ஆந்திராவில் வீசிய, 'முரசு' புயலால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் மின் வினியோக கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை சரிசெய்ய உதவுமாறு, தமிழக முதல்வர் விஜயிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். முதல்வர் விஜய் உத்தரவில், ஆந்திராவில் மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, 500 மின்வாரிய பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் ஆந்திராவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளது. மின் விநியோகத்தைச் விரைவாகச் சீரமைக்கும் பணிக்காக, தேவையான உபகரணங்களுடன் 500 அனுபவம் வாய்ந்த மின் பணியாளர்களை கர்நாடகா அனுப்பி வைத்துள்ளது என முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர், 'எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்', என உறுதி அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us