வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : நவ 18, 2025 07:25 AM

சென்னை: கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் (நவ.,18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.,18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

