தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே!
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே!
ADDED : அக் 22, 2025 08:17 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலை 8:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் வானூரில் 184 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது.
இந்த சூழல், இன்று மதியம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
பின்னர் இது, வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது.
இந்த நிலை, புயலாக மாறுமா என்பதை இன்று தான் கணிக்க முடியும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ரெட் அலெர்ட்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிகனமழை, அதாவது, 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று மிக கனமழை அதாவது, 11 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
மஞ்சள் அலெர்ட்
சேலம், திருச்சி, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில், நாளை மிக கனமழையும், வேலுார், திருப்பத் துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* வானூர்- 184 * வல்லம்- 170 * விழுப்புரம்-168 * ஊத்துக்கோட்டை-167* தியாகதுருகம்- 125 * செஞ்சி-123 * வாலாஜாபாத்-117 * ஆவடி- 117 * கெடார்-115 * திருவாலங்காடு -112 * நெற்குன்றம்-110 * மதுரவாயல்- 106 * வளவனூர்-106 * மண்டபம் - 103 * சூரப்பட்டு- 103 * திண்டிவனம்- 103 * கோலியனூர்- 100 * கலவை-99 * மதுராந்தகம்-98 * சாலிகிராமம்-96 * அரவக்குறிச்சி-96 * முண்டியம்பாக்கம்-95 * மரக்காணம்- 94 * திருப்புவனம்- 93 * வளசரவாக்கம்- 91 * காரைக்குடி-90 * கும்மிடிபூண்டி- 89 * ஸ்ரீபெரும்புதூர்-88 * ஆற்காடு- 88 * நீடாமங்கலம்- 88 * திருப்பத்தூர்- 88 * உடுமலை-85 * மணலூர்பேட்டை- 85 * சங்கராபுரம்- 85