ADDED : ஆக 13, 2024 04:02 AM

தமிழக காங்கிரசில் மாணிக் தாகூர் எம்.பி.,யின் ஆதரவாளர்கள், ராஜிவ் ஜோதி யாத்திரை வாயிலாக புது கோஷ்டியை துவக்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளிலும், பிறந்த நாளிலும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து டில்லிக்கு, ராஜிவ் ஜோதி யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.
தற்போது, ராஜிவ் பிறந்த நாளை ஒட்டி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் தலைமையில், ராஜிவ் ஜோதி யாத்திரை துவங்கியது. மாணிக் தாகூர் ஆதரவாளரும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலருமான சிரஞ்சீவி, யாத்திரையை துவக்கி வைத்தார்.
வரும் 20ம் தேதி ராஜிவ் பிறந்த நாளில் ஜோதி யாத்திரை, டில்லியில் உள்ள வீர் பூமியை அடையும். யாத்திரையில் ஐந்து வாகனங்களில் 30 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ராஜிவ் புகழை பரப்புகிற வகையில் துண்டு பிரசுரங்களை, டில்லி செல்லும் வழியில் 40 மாவட்டங்களில் வழங்கஉள்ளனர்.
ஜோதி யாத்திரை துவக்க நிகழ்ச்சிக்கு, மற்ற கோஷ்டி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால், அவர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, தமிழக காங்.,கில் புதிதாக ஒரு கோஷ்டி, மாணிக் தாகூர் தலைமையில் உருவாகியிருப்பது, இந்நிகழ்ச்சி வாயிலாக வெளியே தெரிந்திருக்கிறது என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

