கோவை தொழில்துறையினர் மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?

ADDED : செப் 13, 2024 06:11 AM

கோவை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவை தொழில்துறையினர் முன் வைத்த கோரிக்கைகள்:
சி.ஐ.ஐ., தெற்கு மண்டல தலைவர் நந்தினி ரங்கசாமி :
பெண் தொழில்முனைவோர்கள் தேசிய பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர். கோவையில் உயர்கல்வியில், 60 சதவீதத்திற்கும் அதிமான மாணவியர் பட்டம் பெறுகின்றனர். தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில், 165 முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில கோவையில் உள்ளன. கோவை தொழில் மட்டுமின்றி கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளிலும் முதன்மை வகிக்கிறது. ஐ.ஐ.ஐ.டி., கோவையில் அமைக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், பொறியியல் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
பருத்தி இறக்குமதி குறைப்பு
இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன்:
சீனா, மாதந்தோறும் ஜவுளி மட்டும் 12 பில்லியன் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். நம் நாட்டில், 1.2 பில்லியன் ஏற்றுமதி செய்கிறோம். மேற்கத்திய நாடுகள், 'சீனா பிளஸ் ஒன்' அணுகுமுறையின் படி ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கின்றனர். எனவே, இங்கு இந்தியாவில் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; அல்லது 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதி அதிகரிக்கும்.
கடன் வட்டி விகிதம்
கோவை பவுண்டரி தொழில் உரிமையாளர் சங்க தலைவர் ராமநாதன்:
மூலப்பொருட்களின் விலை ஏற்றம் சந்தையில் ஏறுமுகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நேரடியாக சிட்கோ வாயிலாக அனைத்து எம்.எஸ்.எம்.இ., க்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பவுண்டரி தொழில் மூலப்பொருட்களின் ஜி.எஸ்.டி., வரி 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கவேண்டும்.
சிறு, குறு தொழில் கடன் வட்டி விகிதம் 8 சதவீதத்திற்குள் இருக்கவேண்டும். ஐந்து சதவீத லாபத்திற்கு குறைவாகத்தான் தொழில் செய்ய முடிகிறது. வாங்கும் கடன் தொகையை இரு சுழற்சி செய்தால் மட்டுமே வங்கி கடனுக்கு வட்டி விகிதம் கட்ட முடிகிறது. ஒரு சுழற்சிக்கே படாதபாடு படுகிறோம். இதனால், வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும். மேலும், 2 கோடி ரூபாய்க்கு கீழ் வாங்கும் கடன் தொகைக்கு, 'கொலாற்றல் செக்யூரிட்டி' வழங்க கட்டாயப்படுத்த கூடாது.
விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் ஏன்?
தென்னிந்தியா டெக்ஸ்டைல் மிஷினரி டீலர்ஸ் சங்க பொருளாளர் மருதாச்சலமூர்த்தி:
ஜி.எஸ்.டி., பில்.,போடும் போது சில பிழைகளுக்கு கூட கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதே போன்று, பொருளின் மதிப்பீடு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் என்ன பொருட்களுக்கு என்ன விலை என்பதையும், எந்த தவறுகளுக்கு என்ன அபராதம் என்பதையும் தெளிவாக நிர்ணயம் செய்து வெளியிடவேண்டும். அதிகாரிகள் அவரவர்களுக்கு ஏற்ப அபராதம் விதிப்பதற்கு தீர்வு காணவேண்டும்.
மேலும், எங்களிடம் இருந்து ஒரு நபர் பொருட்களை கொள்முதல் செய்த பின்னர் ஆறு மாதங்கள், ஒரு ஆண்டு கழித்து அவர், ஜி.எஸ்.டி., கட்டவில்லை என்று, எங்களை கட்ட நோட்டீஸ் அனுப்புகின்றனர். ஒரு நபர் சரியானவரா, இல்லையா என்பதை நாங்கள் எப்படி உறுதி செய்து தொழில் செய்ய முடியும்? ஜி.எஸ்.டி., சரியாக தாக்கல் செய்யாதவர்களை உடனடியாக முடக்கம் செய்வதை தவிர்த்து, விற்பவர்களுக்கு சிரமங்களை கொடுக்கின்றனர்.
புதிய பிரிவு அவசியம்
'போசியா' ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ்:
குறுந்தொழில் நிறுவனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட முதலீட்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவும், ஆண்டு வருவாய், 5 கோடிக்கு ரூபாய்க்கு குறைவாகவும் இருக்கவேண்டும். ஆனால், 90 சதவீத குறுந்தொழில் நிறுவனங்கள், 25 லட்சத்திற்கு குறைவாக இயந்திரங்கள் உள்ள முதலீட்டிற்கும், ஆண்டு வருவாய் 1 கோடிக்கு குறைவாகவும் உள்ளன. இதன் காரணமாக, 'டைனி அல்லது 'நேனோ நிறுவனங்கள்' என்ற புதிய பிரிவை உருவாக்கி, சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கினால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
சிறப்பு குழு வேண்டும்
லகு உத்யோக் பாரதி- மாநில செயலாளர் நாராயணசாமி:
விசைத்தறி யூனிட்களை நவீன படுத்தவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. விசைத்தறி நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. காடா துணிகளுக்கு ஏற்றுமதி ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். அழியும் நிலையில் உள்ள இத்தொழிலை மீட்டெடுக்க சிறப்பு குழு அமைத்து ஒருங்கிணைந்த தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்.
'சர்பாசி' சட்ட அவகாசம் போதாது
கோப்மா தலைவர் மணிராஜ்:
பம்ப்செட் விற்பனைக்கு18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜி.எஸ்.டி., வரியை குறைக்கவேண்டும். வங்கி கடன் 25 லட்சம் வரை பெறும் குறுந்தொழில் முனைவோருக்கு, 6 சதவீத வட்டி நிர்ணயிக்கவேண்டும். மேலும், மூன்று மாதங்கள் வட்டி செலுத்தாவிட்டால், சர்பாசி சட்டம் வாயிலாக நடவடிக்கை எடுப்பதை ஒரு ஆண்டாக மாற்றி காலஅவகாசம் அளிக்கவேண்டும். வாகனங்களில் பொருட்கள் எடுத்து செல்லும் போது, விற்பனை பில்களில் சிறு பிழைகள் இருந்தால் கூட அதிக அபராதம் விதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதற்கு உரிய அதிகாரிகளுக்கு , உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை ஆண்டு புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொடிசியா சி.டி.ஐ.ஐ.சி., இயக்குனர் சுந்தரம் :
இந்தியாவின் முதன் பாதுகாப்புத்துறை ஹப் கோவை கொடிசியாவில் அமைக்க உதவியதற்கு நன்றி. சி.டி.ஐ.ஐ.சி., ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கு உதவுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆராய்ச்சி சார்ந்த நிதிகளுக்கு, அரசு, தனியார் கல்விநிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு வழங்கியது வரவேற்கத்தக்கது. அதே போல், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட இன்குபேசன் மையங்களுக்கும் விலக்கு அளிக்கவேண்டும்; இதன் வாயிலாக, புதிய ஸ்டாட் அப், கண்டுபிடிப்புகள் உருவாக வாய்ப்புகள் உருவாகும்.
மேலும், நிதி வழங்கும் பொழுது கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கவேண்டும்.
சைமா தலைவர் சுந்தர்ராமன் :
ஜவுளி தொழிலில், மூலப்பொருட்களுக்கே அதிக செலவினங்கள் ஏற்படுகின்றன. அதில், 85 சதவீத மூலப்பொருட்கள் பருத்தி மட்டுமே. கடந்த நான்கு மாதங்கள், இந்திய பருத்தி விலை மற்றும் இறக்குமதி விலை 10 சதவீதம் வங்கதேச உற்பத்தியாளர்களை காட்டிலும் அதிகமாக உள்ளதால் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இதனால், சீசன் இல்லாத சமயங்களில் ( ஏப்., - அக்., வரை) 11 சதவீத இறக்குமதி வரி விலக்கு அளிக்கவேண்டும். இதனால், மூலப்பொருட்களின் விலை குறைவாக பெற்று, சர்வதேச போட்டியாளர்களை எதிர்கொள்ள இயலும். வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும்.
கோவை வெட் கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் பாலசந்திரன் :
கடந்த, 2017ம் ஆண்டு கிரைண்டர் உற்பத்திக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு தொழில் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2019ல் ஜி.எஸ்.டி., வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தொழில் உச்சம் பெற்றது. ஆனால், 2022ல் மீண்டும் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு, உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரியை 12 சதவீதமாக குறைக்கவேண்டும். அதே போன்று, சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டி 9 சதவீதமாக குறைக்கவேண்டும்.
தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் :
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி, 6 சதவீதம் குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், தங்க நகை உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரி 15 சதவீதம் மற்றும் ஜி.எஸ்டி., செலுத்தி தங்கம் வங்கி கடன் பெற்று வாங்கியுள்ளோம். இந்த அறிவிப்பால், ஒரு கிலோ தங்கத்திற்கு 5.53 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை அரசு திருப்பி செலுத்தி இழப்பில் இருந்து மீள உதவவேண்டும். மேலும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டி விகிதம், 6.5 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், பெரிய நெருக்கடியை சந்திக்கின்றோம்; முன்பு இருந்தது போல், சரியாக அனைத்து தவணை கட்டி முடிப்பவர்களுக்கு 3 சதவீத வட்டி தொகையை திருப்பி வழங்கவேண்டும்.
நெருக்கடியில் மீள உதவுங்கள்

- முத்து வெங்கட்ராமன், தலைவர், தங்க நகை தயாரிப்பாளர் சங்கம்
ஐ.ஐ.டி., அமைய வேண்டும்
பெண் தொழில்முனைவோர்கள் தேசிய பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர். கோவையில் உயர்கல்வியில், 60 சதவீதத்திற்கும் அதிமான மாணவியர் பட்டம் பெறுகின்றனர். தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில், 165 முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில கோவையில் உள்ளன. கோவை தொழில் மட்டுமின்றி கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளிலும் முதன்மை வகிக்கிறது. ஐ.ஐ.டி., கோவையில் அமைக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், பொறியியல் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
- நந்தினி ரங்கசாமி, தலைவர், சி.ஐ.ஐ., தெற்கு மண்டலம்
பருத்தி இறக்குமதி குறைப்பு
சீனா, மாதந்தோறும் ஜவுளி மட்டும் 12 பில்லியன் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். நம் நாட்டில், 1.2 பில்லியன் ஏற்றுமதி செய்கிறோம். மேற்கத்திய நாடுகள், 'சீனா பிளஸ் ஒன்' அணுகுமுறையின் படி ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கின்றனர். எனவே, இங்கு இந்தியாவில் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; அல்லது 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதி அதிகரிக்கும்.
- பிரபு தாமோதரன், இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு கன்வீனர்
வட்டி குறைக்க வேண்டும்
கடந்த, 2017ம் ஆண்டு கிரைண்டர் உற்பத்திக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு தொழில் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2019ல் ஜி.எஸ்.டி., வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தொழில் உச்சம் பெற்றது. ஆனால், 2022ல் மீண்டும் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு, உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரியை 12 சதவீதமாக குறைக்கவேண்டும். அதே போன்று, சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டி 9 சதவீதமாக குறைக்கவேண்டும்.
- பாலசந்திரன், தலைவர் கோவை வெட் கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம்
இறக்குமதி வரி விலக்கு
ஜவுளி தொழிலில், மூலப்பொருட்களுக்கே அதிக செலவினங்கள் ஏற்படுகின்றன. அதில், 85 சதவீத மூலப்பொருட்கள் பருத்தி மட்டுமே. கடந்த நான்கு மாதங்கள், இந்திய பருத்தி விலை மற்றும் இறக்குமதி விலை 10 சதவீதம் வங்கதேச உற்பத்தியாளர்களை காட்டிலும் அதிகமாக உள்ளதால் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இதனால், சீசன் இல்லாத சமயங்களில் ( ஏப்., - அக்., வரை) 11 சதவீத இறக்குமதி வரி விலக்கு அளிக்கவேண்டும். இதனால், மூலப்பொருட்களின் விலை குறைவாக பெற்று, சர்வதேச போட்டியாளர்களை எதிர்கொள்ள இயலும். வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும்.
- சுந்தர்ராமன், தலைவர், சைமா.
விலக்கு அளிக்க வேண்டும்
இந்தியாவின் முதன் பாதுகாப்புத்துறை ஹப் கோவை கொடிசியாவில் அமைக்க உதவியதற்கு நன்றி. சி.டி.ஐ.ஐ.சி., ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கு உதவுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆராய்ச்சி சார்ந்த நிதிகளுக்கு, அரசு, தனியார் கல்விநிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு வழங்கியது வரவேற்கத்தக்கது. அதே போல், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட இன்குபேசன் மையங்களுக்கும் விலக்கு அளிக்கவேண்டும்; இதன் வாயிலாக, புதிய ஸ்டாட் அப், கண்டுபிடிப்புகள் உருவாக வாய்ப்புகள் உருவாகும். மேலும், நிதி வழங்கும் பொழுது கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கவேண்டும்.
- சுந்தரம், இயக்குனர், கொடிசியா சி.டி.ஐ.ஐ.சி.,
'சர்பாசி' சட்ட அவகாசம் போதாது
பம்ப்செட் விற்பனைக்கு18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜி.எஸ்.டி., வரியை குறைக்கவேண்டும். வங்கி கடன் 25 லட்சம் வரை பெறும் குறுந்தொழில் முனைவோருக்கு, 6 சதவீத வட்டி நிர்ணயிக்கவேண்டும். மேலும், மூன்று மாதங்கள் வட்டி செலுத்தாவிட்டால், சர்பாசி சட்டம் வாயிலாக நடவடிக்கை எடுப்பதை ஒரு ஆண்டாக மாற்றி காலஅவகாசம் அளிக்கவேண்டும். வாகனங்களில் பொருட்கள் எடுத்து செல்லும் போது, விற்பனை பில்களில் சிறு பிழைகள் இருந்தால் கூட அதிக அபராதம் விதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதற்கு உரிய அதிகாரிகளுக்கு , உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை ஆண்டு புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- மணிராஜ், தலைவர், கோப்மா
சிறப்பு குழு வேண்டும்
விசைத்தறி யூனிட்களை நவீன படுத்தவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. விசைத்தறி நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. காடா துணிகளுக்கு ஏற்றுமதி ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். அழியும் நிலையில் உள்ள இத்தொழிலை மீட்டெடுக்க சிறப்பு குழு அமைத்து ஒருங்கிணைந்த தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்.
- நாராயணசாமி,மாநில செயலாளர், லகு உத்யோக் பாரதி
புதிய பிரிவு அவசியம்
குறுந்தொழில் நிறுவனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட முதலீட்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவும், ஆண்டு வருவாய், 5 கோடிக்கு ரூபாய்க்கு குறைவாகவும் இருக்கவேண்டும். ஆனால், 90 சதவீத குறுந்தொழில் நிறுவனங்கள், 25 லட்சத்திற்கு குறைவாக இயந்திரங்கள் உள்ள முதலீட்டிற்கும், ஆண்டு வருவாய் 1 கோடிக்கு குறைவாகவும் உள்ளன. இதன் காரணமாக, 'டைனி அல்லது 'நேனோ நிறுவனங்கள்' என்ற புதிய பிரிவை உருவாக்கி, சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கினால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
- ஜேம்ஸ், ஒருங்கிணைப்பாளர், 'போசியா'
விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் ஏன்?
ஜி.எஸ்.டி., பில் போடும் போது சில பிழைகளுக்கு கூட கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதே போன்று, பொருளின் மதிப்பீடு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் என்ன பொருட்களுக்கு என்ன விலை என்பதையும், எந்த தவறுகளுக்கு என்ன அபராதம் என்பதையும் தெளிவாக நிர்ணயம் செய்து வெளியிடவேண்டும். அதிகாரிகள் அவரவர்களுக்கு ஏற்ப அபராதம் விதிப்பதற்கு தீர்வு காணவேண்டும்.
மேலும், எங்களிடம் இருந்து ஒரு நபர் பொருட்களை கொள்முதல் செய்த பின்னர் ஆறு மாதங்கள், ஒரு ஆண்டு கழித்து அவர், ஜி.எஸ்.டி., கட்டவில்லை என்று, எங்களை கட்ட நோட்டீஸ் அனுப்புகின்றனர். ஒரு நபர் சரியானவரா, இல்லையா என்பதை நாங்கள் எப்படி உறுதி செய்து தொழில் செய்ய முடியும்? ஜி.எஸ்.டி., சரியாக தாக்கல் செய்யாதவர்களை உடனடியாக முடக்கம் செய்வதை தவிர்த்து, விற்பவர்களுக்கு சிரமங்களை கொடுக்கின்றனர்.
- மருதாச்சலமூர்த்தி, பொருளாளர், தென்னிந்தியா டெக்ஸ்டைல் மிஷினரி டீலர்ஸ் சங்கம்
கடன் வட்டி விகிதம்
மூலப்பொருட்களின் விலை ஏற்றம் சந்தையில் ஏறுமுகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நேரடியாக சிட்கோ வாயிலாக அனைத்து எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பவுண்டரி தொழில் மூலப்பொருட்களின் ஜி.எஸ்.டி., வரி 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கவேண்டும்.
சிறு, குறு தொழில் கடன் வட்டி விகிதம் 8 சதவீதத்திற்குள் இருக்கவேண்டும். ஐந்து சதவீத லாபத்திற்கு குறைவாகத்தான் தொழில் செய்ய முடிகிறது. வாங்கும் கடன் தொகையை இரு சுழற்சி செய்தால் மட்டுமே வங்கி கடனுக்கு வட்டி விகிதம் கட்ட முடிகிறது. ஒரு சுழற்சிக்கே படாதபாடு படுகிறோம். இதனால், வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும். மேலும், 2 கோடி ரூபாய்க்கு கீழ் வாங்கும் கடன் தொகைக்கு, 'கொலாற்றல் செக்யூரிட்டி' வழங்க கட்டாயப்படுத்த கூடாது.
- ராமநாதன், தலைவர், கோவை பவுண்டரி தொழில் உரிமையாளர் சங்கம்
- நமது நிருபர் -