sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

7.29 லட்சம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் 'பெயில்': திறன் தேர்வில் அதிர்ச்சி; சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு

/

7.29 லட்சம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் 'பெயில்': திறன் தேர்வில் அதிர்ச்சி; சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு

7.29 லட்சம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் 'பெயில்': திறன் தேர்வில் அதிர்ச்சி; சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு

7.29 லட்சம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் 'பெயில்': திறன் தேர்வில் அதிர்ச்சி; சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு

3


ADDED : ஆக 14, 2025 01:28 AM

Google News

3

ADDED : ஆக 14, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், 6 முதல் 9ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் எழுதுதல், படித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறித்த தேர்வில், அரசு பள்ளி மாணவ - மாணவியர், 7.29 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கும் சிறப்பு வகுப்பு தற்போது நடக்கிறது.

தமிழகத்தில், 38 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில், 6 முதல், 9ம் வகுப்பு வரை, 16 லட்சத்து 7,995 பேர் படிக்கின்றனர். அதில் , அடிப்படை கல்வி தெரியாதவர்கள் என கண்டறியப்பட்ட, 8 லட்சத்து 2,214 மாணவ - மாண வியருக்கு திறன் தேர்வு நடத்தப்பட்டது.

கட்டாய தேர்ச்சி கடந்த ஜூலை 8 முதல், 10 வரை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் மதிப்பெண்​அடிப்படையில் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை 25ல் வெளியாகின. அதில், 7 லட்சத்து 29,683 பேர் தேர்ச்சி பெறவில்லை .

இதன் மூலம் தமிழகத்தில், 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மொத்த மாணவ - மாணவியர் எண்ணிக்கையில், 45.38 சதவீதம் பேருக்கு அடிப்படை கல்வி கூட தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 6,322 பேர் தேர்ச்சி பெறவில்லை, இது, 67.41 சதவீதம்.

பெரம்பலுார் மாவட்டத்தில், 10,741 பேர் தேர்ச்சி பெறவில்லை; இது, 65.85 சதவீதம். திருச்சி மாவட்டத்தில், 29,806 பேர் தேர்ச்சி பெறவில்லை, இது, 55.34 சதவீதம். சென்னை மாவட்டத்தில், 31,233 பேர் தேர்ச்சி பெறவில்லை, இது, 54.47 சதவீதம்.

இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் படிக்கும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் பலர், 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள பாடங்களை கூட படிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். கணிதத்திலும் திண்டாடுகின்றனர் என, பல ஆய்வுகளில் தகவல் வெளியாகி உள்ளன.

இதை, தமிழக அரசு மறுத்து வந்தது. பள்ளி கல்வித்துறை நடத்திய தேர்விலேயே, அடிப்படை கல்வியில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை.

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதால், கல்வியில் கவனம் செலுத்துவதில்லை. கற்றாலும், கற்காவிட்டாலும் தேர்ச்சி என்பது சரியான நடைமுறை அல்ல என்பதற்கு, இந்த தேர்வே சான்றாக உள்ளது.

சிறப்பு பயிற்சி மேலும், திறன் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு ஆக., 1 முதல், 30 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் கையேடு வழங்கப் பட்டுள்ளது.

வெளிப்படையாக கூறினால், 1 முதல், 5ம் வகுப்பு வரை கற்க வேண்டிய அடிப்படை பாடத்தை, மீண்டும் சொல்லி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐந்தாண்டுகளில் கற்க முடியாத மாணவ - மாணவியருக்கு, 30 நாட்களில் எப்படி சொல்லி கொடுக்க முடியும்?

இவர்களை ரெகுலர் மாணவர்களில் இருந்து பிரித்து, சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யும் போது, உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலைக்கு, மாணவ - மாணவியர் மட்டுமின்றி, தொடக்க கல்வி ஆசிரியர்களும் முக்கிய காரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட வாரியாக விபரம் மாவட்டம் மொத்த மாணவர் திறன் தேர்வு எழுதியவர் ஆப்சென்ட் தேர்வில் தோல்வி சதவீதம் அரியலுார் 23499 12278 61 10400 44.26 செங்கல்பட்டு 47359 24312 192 22846 48.24 சென்னை 57335 34734 233 31233 54.47 கோவை 59232 34531 239 31562 53.29 கடலுார் 59091 26404 104 23554 39.86 தர்மபுரி 52698 22976 75 21394 40.60 திண்டுக்கல் 44070 23211 141 21309 48.35 ஈரோடு 51766 23048 176 21277 41.10 கள்ளக்குறிச்சி 53521 26851 102 25030 46.77 காஞ்சிபுரம் 31599 17889 129 14164 44.82 கன்னியாகுமரி 23519 10402 8 8220 34.95 கரூர் 25417 13655 75 13075 51.44 கிருஷ்ணகிரி 68557 33406 220 30383 44.32 மதுரை 51722 24429 125 21857 42.26 மயிலாடுதுறை 18066 9226 60 8456 46.81 நாகப்பட்டினம் 20040 11735 115 10713 53.46 நாமக்கல் 40137 22730 117 20516 51.11 பெரம்பலுார் 16311 12213 68 10741 65.85 புதுக்கோட்டை 60651 28966 85 25803 42.54 ராமநாதபுரம் 29528 13771 57 12762 43.22 ராணிபேட்டை 33653 14953 64 13875 41.23 சேலம் 94599 43998 120 41639 44.02 சிவகங்கை 32074 15105 42 13904 43.35 தென்காசி 25551 10213 21 9433 36.92 தஞ்சாவூர் 49487 23828 198 22147 44.75 நீலகிரி 9378 7535 67 6322 67.41 தேனி 22505 10574 102 9992 44.40 துாத்துக்குடி 21598 9893 25 8421 38.99 திருச்சி 53860 33789 87 29806 55.34 திருநெல்வேலி 23362 13102 39 11102 47.52 திருப்பத்துார் 32777 15892 109 14068 42.92 திருப்பூர் 66195 28703 141 27003 40.79 திருவள்ளூர் 58987 25221 212 23913 40.54 திருவண்ணாமலை 84975 38915 190 36116 42.50 திருவாரூர் 30380 15722 93 14719 48.45 வேலுார் 38683 17210 78 16023 41.42 விழுப்புரம் 59002 35491 117 31490 53.37 விருதுநகர் 36811 15303 68 14415 39.16 மொத்தம் 16,07,995 8,02,214 4155 7,29,683 45.38

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us