ம.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு வலை விரித்துள்ள அ.தி.மு.க.,
ம.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு வலை விரித்துள்ள அ.தி.மு.க.,
ADDED : பிப் 23, 2024 04:59 AM

ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை இழுக்க, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இரு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' கேட்டு, ம.தி.மு.க., மனு அளித்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர், லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.
ஆனால், கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோவுக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியடைகிற முக்கிய நிர்வாகிகளை, அ.தி.மு.க.,வுக்கு இழுத்து வாருங்கள்' என, மாவட்டச் செயலர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வாரிசு
அரசியலை எதிர்த்து வெளியேறியுள்ள
ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,வில் இணைவதற்கு தயாராக உள்ளனர்.
ஆனால், கூட்டணி தர்மம் காரணமாக, அவர்களை சேர்க்க தி.மு.க., தயங்குகிறது. எனவே, அவர்களை அரவணைக்க பழனிசாமி தயாராக உள்ளார்.
அதன்படிசமீபத்தில் கரூர் நகர ம.தி.மு.க., செயலர் கபிணி, கே.சி.பாலச்சந்திரன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
கரூர் மாவட்டத்தை தொடர்ந்து, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அதிருப்தியாக இருக்கிற ம.தி.மு.க., நிர்வாகிகளை இழுக்கும் வேலையையும் அக்கட்சியினர் துவக்கி உள்ளனர்.
- நமது நிருபர் -