தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/'ஐடி' வேலையை காட்டிலும் ஆட்டோ டிரைவருக்கு வருவாய்

'ஐடி' வேலையை காட்டிலும் ஆட்டோ டிரைவருக்கு வருவாய்

'ஐடி' வேலையை காட்டிலும் ஆட்டோ டிரைவருக்கு வருவாய்

2


UPDATED : செப் 30, 2026 05:58 AM

ADDED : செப் 30, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : செப் 30, 2026 05:58 AM ADDED : செப் 30, 2026 05:50 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்சி தொடங்குகிறார் பெண் ஐ.ஏ.எஸ்.,



உ .பி., மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர் திவ்யா மித்தல். இவர், 13 ஆண்டு பணிக்கு பிறகு, தானாக முன் வந்து ஓய்வு பெற்றார். தான் அரசியலில் ஈடுபடப்போவதாக 'எக்ஸ்' தளத்தில் அறிவித்துள்ள அவர், 'ஏற்கனவே இருக்கும் கட்சிகள் எதிலும் சேரப்போவதில்லை' என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Image 1624540

'சாமானிய மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, நீதி பெறுவதே என் அரசியலின் நோக்கமாக இருக்கும். அரசியலை மாற்றியே தீர வேண்டும்' என்கிறார், திவ்யா மித்தல்.

ஆகாயத்தில் பறக்க ஆசை; சுட்டிப்பெண் வீடியோ



'ஏ ர் ஹோஸ்டஸ்' ஆக செயல்பட விரும்பிய குட்டிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய இண்டிகோ விமான நிறுவனத்தின் வீடியோ, வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. விமான பணிப்பெண் சீருடையில் வந்த குட்டிப்பெண்ணை, இண்டிகோ ஊழியர்கள் வரவேற்று அழைத்துச் செல்கின்றனர். விமான நிலையத்திலும், விமானத்தினுள்ளும் அந்த சிறுமியை பார்த்த அனைவரும், ஆர்வத்துடன் போட்டோ எடுக்கின்றனர். ஊழியர்களுக்கான பணியையும் உற்சாகத்துடன் செய்கிறாள் அந்த சிறுமி. இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்ட கியா சிங் என்பவர், 'முகத்தில் சிரிப்பு, நடையில் நம்பிக்கை, ஆகாயத்தை நோக்கிய பயணம்' என்று தலைப்பிட்டுள்ளார். வலைதளவாசிகள் பலரும், குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Image 1624541

'அனுமன் சாலிஸா' மகிமையால் அழும் குழந்தையும் அமைதியாகும்


அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசிக்கும் சீனப்பெண் சாரா ஜேன் ஹோ, 40, தன் 4 மாத குழந்தையை பராமரிப்பது பற்றிய பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 'இந்திய நண்பர்களால் அறிந்த அனுமன் சாலிஸா பக்தி பாடலை ஒலிக்க விட்டால் போதும்; அழுது அடம் பிடிக்கும் என் குழந்தை, 5 வினாடிகளில் அமைதியாகி விடுகிறது. 2 நிமிடங்களில் துாங்கி விடுகிறது' என்று கூறியுள்ளார் சாரா. ஒவ்வொரு நாள் காலையிலும், தான் அந்த பாடலை திரும்பத் திரும்ப ஒலிக்க விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது பதிவை பாராட்டி, பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Image 1624542

'ஐடி' வேலையை காட்டிலும் ஆட்டோ டிரைவருக்கு வருவாய்



பெ ங்களூரில் ரேபிடோ ஆட்டோவில் பயணித்த தன்வி என்ற பெண், ஆட்டோ ஓட்டும் பெண் டிரைவர் அழகான ஆங்கிலத்தில் பேசியதை கேட்டதும் ஆச்சரியம் அடைந்தார். அவர், முன்பு 'ஐடி' நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்பதை அறிந்ததும், அதிர்ச்சியாக இருந்தது.

ஆட்டோ ஓட்டியபடியே பேசிய அந்த பெண், 'தந்தை இறந்த நிலையில், 'ஐடி' நிறுவன இரவுப்பணியை பார்த்துக் கொண்டு, தாயை பராமரிப்பது சிரமம். அதனால் வேலையை விட்டேன். இப்போது தாயை அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறேன். 'ஐடி' நிறுவனத்தில் கிடைத்ததை விட அதிக வருவாயும் கிடைக்கிறது' என்கிறார். பெண் டிரைவருக்கு வலைதளவாசிகளின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வசிப்பது புறாக்கூடு வாடகையோ ரூ.45,000



து பாயில் வாழ்க்கை செலவினங்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அங்கு வசிக்கும் இந்திய பெண் சாக்சி, தான் வசிக்கும் புறாக்கூடு போன்ற அறையின் வீடியோவை பதிவிட்டுள்ளார். 'சின்னஞ்சிறு பெட்டி போன்ற இந்த அறைக்கு நான் தரும் வாடகை, மாதம் 45 ஆயிரம் ரூபாய் ' என்ற அவரது பதிவு, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Image 1624543

'என் சம்பளத்தில் பாதி, வாடகைக்கே சரியாகி விடுகிறது. இந்தியாவில் இதே வாடகைக்கு, நகரங்களில் 3 படுக்கை அறைகளுடன் கூடிய வீடு கிடைக்கும். இப்போது புதிய வீட்டுக்கு போகிறேன். புதிய ஏரியா, புதிய அண்டை வீட்டார், ஆனால் வீடு அதே சைஸ்' என்ற அவரது பதிவில் வலைதளவாசிகள், தங்கள் வாடகை வீட்டு அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

காப்பாற்றியது ஆர்.பி.எப்.,



உ .பி., பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், மெதுவாக நகரத் தொடங்கியது. அப்போது ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண், தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்து விட்டார். ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள், சமயோசிதமாக அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனடியாக ரயில் நின்றது. பெண் பயணியும் பத்திரமாக மீட்கப்பட்டார். Image 1624544தக்க நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பெண் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. 'சி.சி.டி.வி' யில் பதிவான இந்த காட்சி, ரயில்வே பாதுகாப்பு படையினரின் சிறப்பான பணிக்கு சாட்சி என, வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us