தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தனியார் பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தலாமா?: அரசு ஆலோசனை

தனியார் பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தலாமா?: அரசு ஆலோசனை

தனியார் பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தலாமா?: அரசு ஆலோசனை


ADDED : நவ 25, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தனியார் பஸ்களில் மட்டும் கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து, தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், நீலகிரி தவிர மற்ற மாவட்டங்களில், மொத்தம், 4,600 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், 2018ம் ஆண்டுக்கு பின், தனியார் பஸ் கட்டணம் மாற்றப்படவில்லை.

தொழிலில் நஷ்டம்


டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தனியார் பஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு, தமிழக அரசு நிதி உதவி அளித்து வருகிறது. ஆனால், தனியார் பஸ்களுக்கு எந்த நிதி உதவியும் இல்லை. எனவே, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பயணியர் கட்டணத்தை உயர்த்த கோரி, தனியார் பஸ் உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், போக்குவரத்து வல்லுநர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப் பட்டு வருவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கட்டணத்தை உயர்த்தி தரக்கோரி, தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரும் நிலையில், போக்கு வரத்து ஆணையரக குழுவினருடன் பல்வேறு கட்ட பேச்சு நடத்தப்பட்டது.

விரைவில் முடிவு


இதுகுறித்து, போக்கு வரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, மாநில அரசு நிதி உதவி செய்வதால், பஸ் கட்டண உயர்வு பெரிய விஷயமாக இல்லை. ஆனால், தனியார் பஸ்கள் கட்டணத்தை நம்பியே இருப்பதால், பெரும் நஷ்டத்தில் இருப்பதாக கூறுகின்றனர். தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும், அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில், விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us