ADDED : நவ 12, 2025 04:41 AM

டில்லி, செங்கோட்டையில் கார் குண்டு வெடிக்க செய்து மிகப் பெரும் பயங்கரவாத செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சில நாட்கள் முன், குஜராத்தில் தேசத்தை குறிவைத்த பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட, மூன்று பேரிடமிருந்து கிடைத்த தகவலின் வாயிலாக, மிக பயங்கரமான ரசாயன தாக்குதல்கள் நடத்தும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பாரதம் வலிமையானதாக, வளர்ச்சி பாதையில் முன்னேறுவதை தடுக்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளின் திட்டமிட்ட சதிதான் இது. இந்த இக்கட்டான சூழலில், மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
என்.ஐ.ஏ. உள்ளிட்ட காவல் துறையின் முக்கிய பிரிவுகள், இந்த குற்றத்தில் புலானாய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கச் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- காடேஸ்வரா சுப்ரமணியம்
ஹிந்து முன்னணி மாநில தலைவர்

