sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?

/

தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?

தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?

தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?

3


UPDATED : மார் 18, 2025 09:50 AM

ADDED : மார் 18, 2025 03:59 AM

Google News

UPDATED : மார் 18, 2025 09:50 AM ADDED : மார் 18, 2025 03:59 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல், அதிருப்தியாளர்களை சமாளிக்க, தேர்தலில், 100 சதவீத வெற்றி உட்பட பல காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தை நான்காக பிரித்து, நான்கு செயலாளர்களை அக்கட்சி தலைமை நியமித்துள்ளது. இது தேர்தல் வெற்றிக்கு கைகொடுக்குமா?

தி.மு.க.,வை பொறுத்த வரை, கருணாநிதி காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து தி.மு.க., பின்னடவை சந்தித்து வந்தது. அவருக்கு பின், அந்த இடத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலவில்லை. அதனால், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில, மாவட்டத்தில் முழுமையாக கைப்பற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். இதற்காகவே திருப்பூர் மாவட்டத்தில், நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சிக்குள் விமர்சனம்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு ஆகியவை அ.தி.மு.க., வின் கோட்டையாக உள்ளது. இதனை, கடந்த கால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. உடுமலை, மடத்துக்குளம் அ.தி.மு.க.,வே வென்றன. திருப்பூர் தெற்கிலும், தாராபுரத்திலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., விடம் தி.மு.க., வென்றது. காங்கயத்தில் வென்ற சாமிநாதன் மீண்டும் அமைச்சரானார்.

தற்போது கட்சி மேலிடம் கொங்கு மண்டலத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு மாவட்டமாக இருந்ததை, நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை மேலிடம் சாதகமாக நினைத்தாலும், உள்ளூரை பொறுத்தவரை பல கலவையான விமர்சனங்களும் கட்சிக்குள் தற்போது எழுந்து வருகிறது. இதுதொடர்பாக பெரும் விவாதத்துடன் விமர்சனங்களும் நடக்கிறது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக செல்வராஜ், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாவட்டத்துக்கு, மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன் ஆகியோரை மாவட்ட செயலாளர்களாக கட்சித் தலைமை நியமித்துள்ளது. மாவட்டத்தில் அமைச்சர்களாக சாமிநாதன், கயல்விழி என, இருவர் இருந்தாலும், மூத்த அமைச்சர் என்ற வகையில் சாமிநாதன் கை தான் ஓங்கி உள்ளது. கயல்விழி அமைச்சர் என்ற பெயரவில் தான் உள்ளார். கட்சிக்குள் பெரியதாக தன்னுடைய தலையீட்டை செய்ய முடியாது.

அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜூக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். நலத்திட்டங்களில் ஆரம்பித்து அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., பங்கேற்பது கிடையாது. அதனையும் மீறி நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பெயருக்கு தலையை காட்டி விட்டு சென்று விடுவார். அமைச்சர் துவக்கி வைத்த நிகழ்ச்சியை, மீண்டும் துவக்கி வைத்த கூத்து எல்லாம், திருப்பூர், பல்லடத்தில் பலமுறை நடந்துள்ளது. கட்சி மேலிடமும் இவர்களின் எதிரும், புதிருமான அரசியலை கண்டும் காணாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுநில மன்னர்கள்


மாவட்டம் நான்காக பிரிக்கப்பட்டு, நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டது குறித்து, கட்சியினர் சில சீனியர் நிர்வாகிகள் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்...

தற்போது, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வாக உள்ள செல்வராஜூக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தும், முழு திருப்தி இல்லாத நிலையில் உள்ளார். இன்னும், ஒரு ஆண்டில் சட்டசபை தேர்தல் வரும் நிலையில், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி 'கம்யூனிஸ்ட் பெல்ட்' என, அந்த கட்சிக்கு சென்றுவிடும் என்பதால், கட்சி வாய்ப்பளித்தால் எங்கு நிற்பது என்ற குழப்பம், இப்போதே எம்.எல்.ஏ.,வை குழப்பத்தில் ஆழ்த்த துவங்கி விட்டது.

அமைச்சர் சாமிநாதன் காங்கயத்தில் இம்முறை போட்டியிட மீண்டும் வாய்ப்பு நிச்சயம் கேட்பார். அதேநேரம், கடந்த தேர்தலில், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் தோல்வியுற்ற கார்த்திகேய சிவசேனாபதியும் அத்தொகுதியை கேட்டு மல்லுக்கட்டுவார். இந்த இருவரில் யாருக்கு 'சீட்' என்பது தற்போதைக்கு வெளிப்படையாக கூற முடியாத நிலை தான் உள்ளது.

தாராபுரத்தில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ.,களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர் பலமாக அடிபடுகிறது. இதன் காரணமாக, தற்போதைய அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதிலும் சிக்கல் உள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், உடுமலையில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் வசித்து, மூலனுாரில் இருந்து திருப்பூருக்கு குடிபெயர்ந்து, மேயருக்கு முட்டிமோதினார். கடைசி நிமிடத்தில் வாய்ப்பு பறிபோக, மண்டலத் தலைவரானார். தற்போது உடுமலையில் போட்டியிட காத்திருக்கிறார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், கடந்த தேர்தலில் தோற்கடிப்பட்டதால், இந்தமுறை இவருக்கு ஒத்துழைப்பு இனி எந்தளவுக்கு இருக்கும் என தெரியாது.

நங்கூரமிட்ட மேயர்


நான்கு மாவட்ட செயலாளர்கள் என்றாலும், அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட பல நிர்வாகிகள், இவர்களை சந்திக்காமல் இருப்பதும், விவாத பொருளாக மாறி உள்ளது. மற்ற, மூன்று பேரை காட்டிலும், தே.மு.தி.க., வில் இருந்து வந்து, தி.மு.க., வில் போட்டியிட்டு, மாநகராட்சி மேயராக உள்ள தினேஷ்குமாருக்கு மேலிட கரிசனமும், அரசியல் அதிர்ஷ்டமும் கைமேல் பலன் தருகிறது.

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான தொழிலதிபதிரை பிடித்துத்தான் இப்பதவியை பெற்றிருப்பதாக கட்சியினர் பலரும் கருதுகிறோம். மேயர் குடும்ப உறுப்பினர் ஒருவர், துணை முதல்வர் உதயநிதியின் மனைவிக்கு நெருக்கம் போன்ற பல காரணங்களால் நங்கூரமாக தனது இடத்தை தக்க வைத்து வருகிறார்.

ஒருவேளை தினேஷ்குமாருக்கு வரும் தேர்தலில் போட்டியிட நேர்ந்தால், திருப்பூர் வடக்கில் கட்சி செல்வாக்கை காட்ட வேண்டிய நெருக்கடியும் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும், அ.தி.மு.க., வலுவாக உள்ள திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசியில், கட்சியை கரையேற வைக்க வேண்டிய கட்டாயமும், கிராமங்கள் அதிகமுள்ள அவிநாசி தொகுதியில், கட்சியின் கோஷ்டிகளை அனுசரித்து, தேர்தல் பணி செய்வதும் தினேஷ்குமாருக்கு பெரிய சவால் தான்.

இந்நிலையில், திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில், இரு கம்யூ., கட்சிகள் போட்டியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இளைஞரணியில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காததால், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பர் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

மொத்தத்தில், திருப்பூர் மாவட்டத்தில், நான்கு செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக்கும். அதே நேரம் அது வெற்றிக் கனியை பறித்து தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






      Dinamalar
      Follow us