தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க.,வுக்கு 'டிபாசிட்' போய்விடக்கூடாது: ஸ்டாலின் எச்சரிக்கை

தி.மு.க.,வுக்கு 'டிபாசிட்' போய்விடக்கூடாது: ஸ்டாலின் எச்சரிக்கை

தி.மு.க.,வுக்கு 'டிபாசிட்' போய்விடக்கூடாது: ஸ்டாலின் எச்சரிக்கை

36


ADDED : செப் 26, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

36

ADDED : செப் 26, 2026 06:44 AM


36
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது போல மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது' என, கட்சியினரை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து, தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அவர்களிடம் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: கடந்த 2017ல், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ், 24,651 ஓட்டுகள் மட்டுமே பெற்று, 'டிபாசிட்' இழந்தார். ஆனால், அ.தி.மு.க., 'டிபாசிட்'டை தக்க வைத்தது.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுத்த பின், அடுத்த பொதுத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க ., வெற்றி பெற்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற தவறு மீண்டும் நடந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கனிமொழி, உதயநிதி பிரசாரம்


தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 30ம் தேதி, மதுராந்தகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, கருங்குழி, கடப்பேரி, சரவம்பாக்கம், பெரும்பேர் கண்டிகை, கீழ் அத்திவாக்கம் கூட்டுச்சாலை என, ஐந்து இடங்களில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி பிரசாரம் செய்கிறார். நாளை மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, கருங்குழி, மாமண்டூர் ஆகிய இடங்களில் இளைஞரணி செயலர் உதயநிதி, திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்ய உள்ளார். நாளை மறுதினம், நெல்வாய் கூட்டு சாலை, எண்டத்துார், எலப்பாக்கம் ஆகிய இடங்களில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பிரசாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us