தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/'ஜெம்' வீரமணி விவகாரம்: கைது நடவடிக்கையில் இருந்து போலீசாரை காப்பாற்ற முயற்சி

'ஜெம்' வீரமணி விவகாரம்: கைது நடவடிக்கையில் இருந்து போலீசாரை காப்பாற்ற முயற்சி

'ஜெம்' வீரமணி விவகாரம்: கைது நடவடிக்கையில் இருந்து போலீசாரை காப்பாற்ற முயற்சி

28


ADDED : செப் 26, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:40 AM

28


28
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'ஜெம்' வீரமணி விவகாரத்தில் காவல் துறையினர் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்க, சில போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வழக்கில், போலீஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆதாரங்கள் இருந்தும், வீரமணி மீதான வழக்கு விசாரணையை முடித்து வைத்த குற்றத்திற்காக, காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப் படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கைது நடவடிக்கையை தவிர்க்க, முதல்வர் விஜயை சாந்தப்படும் பணியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனுக்கள், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று, வழி வழியாக விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படித்தான், வீரமணி மீதான புகாரும், சென்னை போலீசின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மினுக்கு சென்றுள்ளது. வழக்கு விசாரணை குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அளித்த உத்தரவின்படி தான், விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மொத்த பழியும் யாஸ்மின் மீது விழுந்துள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கைது நடவடிக்கை, காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடும். இனி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தால், கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகள் துணிந்து விசாரணை நடத்த தங்குவர். காவல் துறையின் ஒட்டுமொத்த செயல்பாடும் கேள்விக்குள்ளாகி விடும். இது தொடர்பாக ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறையில் தூக்கமின்றி தவிக்கும் வீரமணி


சிறை காவலர்கள் கூறியதாவது: நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்னைகளுக்கு, வீரமணி ஏற்கனவே மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். இதனால், சிறை டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். சிறையில் முதல் வகுப்பில், நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும், துாக்கமின்றி தவிக்கிறார். ஒரு மணி நேரம் கூட அவரால் துாங்க முடியவில்லை. எப்போது பார்த்தாலும், அறையை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு டாக்டர்கள், 'கவுன்சிலிங்' கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us