தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/திமுக மீது பொய்யான அவதுாறு: சொல்கிறார் ஸ்டாலின்

திமுக மீது பொய்யான அவதுாறு: சொல்கிறார் ஸ்டாலின்

திமுக மீது பொய்யான அவதுாறு: சொல்கிறார் ஸ்டாலின்

22


ADDED : செப் 25, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

22

ADDED : செப் 25, 2026 05:50 AM


22
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'சிறுமியருக்கு ஏற்பட்ட துயரத்தை, இடைத்தேர்தலுக்கான கருவியாக பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: சிறுமியருக்கு எதிரான, மனிதத்தன்மையற்ற, இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜெம் வீரமணி கைது செய்யப் பட்டுள்ளார்.

அதிகபட்ச தண்டனை


இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும், காப்பாற்ற முயன்றவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்களானாலும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இதுதான் தி.மு.க.,வின் நிலைப்பாடு.

இனி இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடும் எண்ணமே, எவருக்கும் வராத வகையில், இந்த வழக்கின் முடிவு அமைய வேண்டும் என்பதுதான், ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத் தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் என் விருப்பம்.

ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன், தி.மு.க., மீது பொய்யாக, அவதுாறுகளை பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவருப்பான செயல். வீரமணி வழக்கில், யாரையும் காப்பாற்ற, எந்த உத்தரவும், தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப் படவில்லை.

நிறுத்த வேண்டும்


பெண்கள், சிறுமியருக்கு எதிரான குற்ற வழக்குகளில், பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்று தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும் மறுக்க முடியாத உண்மைகள். யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை தி.மு.க., ஆட்சிக்கு இல்லை.

த.வெ.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது, பாதிக்கப்பட்ட பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள், தி.மு.க., ஆட்சியில் நடக்கவில்லை.

எனவே, சிறுமியருக்கு ஏற்பட்ட துயரத்தை, இடைத்தேர்தலுக்கான கருவியாக பயன்படுத்தும், இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதுாறுகளை பரப்புவதையும், ஆளும்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us