இலக்குகளாக ஐந்து 'சி'; கொள்கைகளாக ஆறு 'டி': வீ த லீடர்ஸ் அறிவிப்பு
இலக்குகளாக ஐந்து 'சி'; கொள்கைகளாக ஆறு 'டி': வீ த லீடர்ஸ் அறிவிப்பு
ADDED : நவ 02, 2026 05:44 AM

சென்னை: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின், பொதுச்செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் அறிக்கை: கடந்த 70 ஆண்டுகளில், தமிழகம் பல அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. பல தலைவர்களை உருவாக்கி இருக்கிறது.
ஆனால், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படுவது, அரசியல் சிந்தனையிலும், தலைமைத்துவத்திலும், நிர்வாகத்திலும், அடிப்படை மாற்றம். அந்த உயர்ந்த நோக்கத்துடன், அண்ணாமலை வழிகாட்டுதலில் உருவானது தான், 'வீ த லீடர்ஸ்' அமைப்பு.
இதன் இலக்கு ஐந்து 'சி'. அதாவது, துாய அரசியல், திறமையான நல்லாட்சி, போட்டித்திறன் மிக்க பொருளாதாரம், மனிதநேய சமுதாயம், குடிமக்கள் தலைமைத்துவம். இவற்றின், ஆங்கில வார்த்தைகளின், முதல் எழுத்துகள் 'சி'.
இதுபோல, கொள்கை அடித்தளம், ஆறு 'டி'யை கொண்டது. அதாவது, தேசம், தெய்வம், தர்மம், வளர்ச்சி, ஜனநாயகம், ஒழுக்கம் ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்து 'டி' . இவை, அடுத்த தலைமுறை தமிழகத்தை உருவாக்குவதற்கான, அரசியல் உறுதிமொழி.
'வீ த லீடர்ஸ்', முழு அரசியல் கட்சியாக பரிண மிக் கும் பாதையில் முன்னேறுகிறது. வரும் நாட்களில் இந்த பயணம், மேலும் தெளிவான வடிவத்தை பெறும். கடந்த 1956ல் தமிழக நிலப்பரப்பு மறுவரையறை செய்யப்பட்டது. தற்போது, 2026ல், தமிழக அரசியல் எதிர்காலத்தை புதிதாக வரையறுக்கும் முயற்சியில், இணைந்திருக்கிறோம். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
