sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சீன தொழில்நுட்பத்துக்கு இரையாகும் இந்திய நிறுவனங்கள்

/

சீன தொழில்நுட்பத்துக்கு இரையாகும் இந்திய நிறுவனங்கள்

சீன தொழில்நுட்பத்துக்கு இரையாகும் இந்திய நிறுவனங்கள்

சீன தொழில்நுட்பத்துக்கு இரையாகும் இந்திய நிறுவனங்கள்

17


ADDED : பிப் 23, 2026 05:27 AM

Google News

17

ADDED : பிப் 23, 2026 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதுக்கு அருகே, 630 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான வாகன தயாரிப்பு ஆலை ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. கட்டி முடிக்கப்பட்டால், ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை அந்த ஆலை தயாரிக்கும். ஸ்டீல், சிமென்ட், எரிசக்தி ஜாம்பவானான பார்த் ஜிண்டாலின் வாகன தயாரிப்பு கனவை நிறைவேற்றுவதற்காக துவங்கப்பட்ட ஜே.எஸ்.டபிள்யு., குழுமம் கட்டி வரும் ஆலை இது.

இந்த ஆலையின் அளவே, ஜிண்டாலின் கனவு எவ்வளவு பெரிது என்பதை புலப்படுத்துகிறது. ஆனால், கண்ணுக்கு புலப்படாத இன்னொரு முக்கிய விஷயம், இங்கு உருவாகும் ஒவ்வொரு காரும், சீன நிறுவனங்களுக்கு மட்டுமே சொந்தமான தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என்பது.

காப்புரிமை தொகை


இப்படி இந்திய பணமும், சீன தொழில்நுட்ப அறிவும் செய்துகொண்ட ஒப்பந்தம் இது மட்டுமல்ல. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி, சூரிய மின்சாரம், மருந்து பொருள்கள் என பல்வேறு துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் இதே மாதிரியான ஒப்பந்தங்களை செய்துவருகின்றன.

கடந்த 2020க்கு பின் இதன் வேகம் இன்னும் அதிகரித்திருக்கிறது. அமைப்பு, துறை, அளவு என பல்வேறு விஷயங்களில் இந்த ஒப்பந்தங்கள் வேறுபட்டாலும், சீன தொழில்நுட்பங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுப்பதில் மட்டும் அவை ஒன்றுபடுகின்றன.

சீனாவுக்கு சொந்தமான எம்.ஜி., மோட்டாரின் பெரும்பான்மை பங்குகளை ஜே.எஸ்.டபிள்யு., கடந்த 2024ல் வாங்கியது. வெளி பார்வைக்கு இது ஒரு கையகப்படுத்தலாக தோன்றலாம். ஆனால் உண்மையில், பெரும்பான்மை வாக்குரிமையையும், வாகன காப்புரிமைகளையும் எம்.ஜி.,யின் தாய் நிறுவனமான எஸ்.ஏ.ஐ.சி., தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு கார் விற்பனையின்போதும் அந்த நிறுவனத்துக்கு காப்புரிமை தொகை அளிக்க வேண்டும். 51 சதவீத பங்குகளை ஜே.எஸ்.டபிள்யு., கைவசம் வைத்திருந்தாலும், அந்த பங்குகளுக்கான மதிப்பை நிர்ணயிக்கும் தொழில்நுட்பங்களை கைவசம் வைத்திருப்பது என்னவோ எஸ்.ஏ.ஐ.சி.,தான்.

எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் இதே நிலை தான். இந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்த தயாரிப்பாளரான டெக்ஸான் டெக்னாலஜிஸ், 2024 டிச., முதல் 2025 ஜூலை வரை விவோ, ஹெச்.கே.சி., லாங்சியர், சாங்க்கிங் யூஹாய், குன்ஷன் க்யு டெக்னாலஜிஸ் என, 5 சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் பெரும்பான்மை பங்கு இந்திய நிறுவனத்துக்கு தான். இருந்தாலும், இந்த ஒப்பந்தங்களின் கீழ் தயாரிக்கப்படும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மை பாகங்கள் சீனாவுக்கு சொந்தமான தொழில்நுட்பத்தை தான் கொண்டிருக்கும்.

பேட்டரி துறையில், 2022ல் சீனாவின் எஸ்வோல்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் எக்ஸைட் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கதையும் இதுதான். இது ஒரு புறம் இருக்க, உலகின் 20 சதவீத ஜெனரிக் மருந்துகளை தயாரிக்கும் இந்தியா, அவற்றுக்கான 70 - 72 சதவீத மூலப்பொருள்களை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.

ஸ்ட்ரெப்டோமைசினுக்கு நம் நாடு சீனாவை தான் முழுதும் நம்பியிருக்கிறது. விட்டமின் பி12க்கு 98 சதவீதமும், பென்சிலினுக்கு 96 சதவீதமும் சீனாவை இந்தியா சார்ந்து இருக்கிறது. 2023ல் 38 ஜிகாவாட்டாக இருந்த நம் சூரிய மின்சார உற்பத்தி திறன் 2025ல் 120 ஜிகாவாட்டாக உயர்ந்திருக்கிறது. ஆனால், இதற்கான 82 சதவீத செல்கள் இன்னுமும் சீனாவில் இருந்துதான் இறக்குமதியாகின்றன.

இக்கட்டான நிலை


இந்திய காற்றாலை மின்சார உற்பத்தி சந்தையில் 41 சதவீதம், சீன நிறுவனமான என்விஷன் வசம் உள்ளது. இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தியா சந்திக்கும் இந்த இக்கட்டான நிலையை 30 ஆண்டுகளுக்கு முன் சீனாவும் எதிர்கொண்டது என்பதுதான். இருந்தாலும், அப்போது சீன அரசும், நிறுவனங்களும் எடுத்த முடிவுகள் அந்த நிலையை மாற்றிக்காட்டின.

உதாரணத்துக்கு, 2010ல் குறைந்த விலை கார்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கீலி நிறுவனம், துவக்கத்தில் கடும் பிரச்னைகளை சந்தித்தது. இருந்தாலும், சற்றும் மனம் தளராத அந்த நிறுவனம், தன்னை விட 6 மடங்கு பெரிய வால்வோ கார்ஸை கையகப்படுத்தியது.

அந்நிறுவனத்தின் ஸ்வீடன் பொறியாளர்களை தக்கவைத்துக்கொண்டு, படிப்படியாக தனது தொழில்நுட்ப திறனை மேம்படுத்தியது. 2020ல் வால்வோ உதவி இல்லாமலேயே சொந்த மின்சார வாகனத்தை அது வெளியிட்டது.

நிபுணத்துவ உத்தி


இந்த வெற்றிக்கதைக்கு பின்னால், வால்வோவின் தொழில்நுட்பத்தை கீலியால் கிரகிக்க முடிந்ததுதான் காரணம். ஆனால், சீன நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில், அத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பதுதான் சோகம். தமிழகத்தின் பாக்ஸ்கான் நிறுவனத்தில் இருந்து 300 சீன பொறியாளர்கள் திடீரென நாடு திரும்பியது சர்ச்சையானது.

வெறும் அசெம்பிளி பணிகளை அவர்கள் எடுத்துச்செல்லவில்லை. மாறாக, உற்பத்திக்கான நிபுணத்துவ உத்திகளுடன் சென்றனர். இதுமட்டுமல்ல, வெளி நாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின்போது, அன்னிய சார்பு நிலையை தவிர்ப்பதற்காக சீன அரசு விதித்த கடுமையான விதிமுறைகளும் இதற்கு கைகொடுத்தன.

ஆனால், இந்தியாவிலோ, இத்தகைய சீன சார்பு நிலையை தடுப்பதற்காக எந்த தீர்க்கமான முயற்சிகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், அவுரங்காபாத் ஆலையில் இருந்து வெளிவரவிருக்கும் கார்களை போல், நம் நாட்டில் தயாரிக்கப்பட இருக்கும் பெரும்பாலான பொருள்கள் 'இந்தியாவில் தயாரானது; ஆனால், தொழில்நுட்பம் சீனாவுடையது' என்பதாக தான் இருக்கும்.






      Dinamalar
      Follow us