தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மிஸ்டர் மூளைக்காரன்: சின்னா மனதில் வைகோ: யாரு சாமி இவன்

மிஸ்டர் மூளைக்காரன்: சின்னா மனதில் வைகோ: யாரு சாமி இவன்

மிஸ்டர் மூளைக்காரன்: சின்னா மனதில் வைகோ: யாரு சாமி இவன்


UPDATED : நவ 08, 2026 11:10 AM

ADDED : நவ 08, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 11:10 AM ADDED : நவ 08, 2026 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏன்... என்னாச்சு சின்னா?


அது... இந்தா, இப்போ சென்னை, வில்லிவாக்கத்துல நடந்த 'சமூக வளைகாப்பு விழா'வுல, 'ஒரு தாய் நினைத்தால் நாட்டை ஆளக்கூடிய நல்ல தலைவர்களை, முதல்வர்களை உருவாக்க முடியும்'னு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார் இல்லையா; அதைக் கேட்டுட்டு, 'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே... நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே...'ன்னு சொல்ற புறநானுாற்றுப் பாடலை முழுசா பாடுறான் சாமி!

புரியலையே சின்னா; அவன் ஏதும் தப்பா பாடிட்டானா?


அட... நீங்க வேற ஏன் சாமி; 'பிள்ளை பெத்து தர்றது என் கடமை; கல்வியும் வீரமும் தர்றது அப்பனோட கடமை; போர்க்களத்துக்கான ஆயுதம் தர்றது கொல்லனோட கடமை; ஒழுக்கமும், நன்னடத்தையும் சொல்லித் தர்றது அரசனோட கடமை'ன்னு அந்த பாட்டு சொல்லுது!

ஓ... புரியுது சின்னா... பயபுள்ள அரசியல் பேசியிருக்கான்!


ஆமா சாமி... போன வாரம் காலி பாட்டில் விவகாரத்துல, பல 'டாஸ்மாக்' கடைகளை சொல்லாம கொள்ளாம பூட்டுனாங்க இல்லையா... அப்போ, திறந்திருந்த கடை வாசல்ல கைநடுங்க வரிசையில நின்னுட்டு இருந்தான் சாமி இவன். அந்த ஒருநாள் துயரத்தை மனசுல வைச்சுக்கிட்டு, 'பெத்த தாய் மட்டும் எங்களை சரியா வளர்த்துட்டா போதுமா... சரக்கு அடிக்கிற தாய்மாமா, சரக்கு அடிக்கத் துாண்டுற சமூகம், 'தீபாவளி' நேரத்துல தாராளமா சரக்கு விற்கிற அரசாங்கம் எல்லாம் திருந்த வேண்டாமா... எங்களுக்கு நல்லது சொல்லி திருத்த வேண்டாமா'ன்னு பொடி வைச்சு கேட்குறான்!

சின்னா... 'இவன் நமக்கு வேணுமா'ன்னு யோசிச்சாகணும்!


ஆமா சாமி... எனக்கும் அதான் தோணுது; 'விசில் ஊதுனோமா... 'ரோடு ஷோ'வை வேடிக்கை பார்த்தோமா'ன்னு 'ஸ்மூத்'தா போயிட்டு இருக்குற நம்ம வாழ்க்கையை, நாசம் பண்ணிருவான் போலத் தெரியுது! சாமி... என்னை சிந்திச்சு பேசச் சொல்றான் சாமி இவன்... என்ன திமிர் இருந்தா இப்படிச் சொல்லுவான்!

என்ன சின்னா சொல்றீங்க... எதுக்காக அப்படிச் சொன்னான்?


'நாளைக்கு தனுஷ், சிவகார்த்திகேயன் யார் கட்சி ஆரம்பிச்சாலும், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நம்ம முதல்வர் ஜோசப் விஜய் கூடத்தான் இருப்பார்'னு அரசியல் பேசுனேன்; 'இதுல என்ன தப்பு'ன்னு என்னை இவன் யோசிச்சு பேசச் சொல்றான்?

விடுங்க சின்னா... வைகோவோட அரசியல் நேர்மையைப் பத்தி இவனுக்கு என்ன தெரியும்... சின்னப்பய!


யாரு சாமி இவன்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us