sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி; தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி

/

 முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி; தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி

 முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி; தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி

 முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி; தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி

19


UPDATED : பிப் 14, 2026 10:24 AM

ADDED : பிப் 14, 2026 04:43 AM

Google News

19

UPDATED : பிப் 14, 2026 10:24 AM ADDED : பிப் 14, 2026 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முஸ்லிம் மக்களில், பெருவாரியாக உள்ள சன்னி பிரிவினர், தி.மு.க., அரசு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முஸ்லிம் மதத்தில், சன்னி, ஷியா என இரு பிரிவினர் உள்ளனர். இதில் பெரும்பான்மை பிரிவை சேர்ந்த சன்னி முஸ்லிம்தான், தமிழகத்தில் அதிகமாக உள்ளனர்.

சன்னி முஸ்லிம் பல ஆண்டுகளாக, தி.மு.க., ஆதரவாக இருந்த, சன்னி முஸ்லிம் அமைப்புகள், சென்னையில், தி.மு.க.,வுக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தி உள்ளன.

இது குறித்து, தென்னிந்திய தர்கா, பள்ளிவாசல் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


சன்னி முஸ்லிம் மக்கள், அமைதியை விரும்புவதுடன், தர்கா மற்றும் மசூதி வழிபாட்டை பின்பற்றுபவர்கள். அதனால்தான், பிரதமர் மோடியே, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவில், ஆண்டுதோறும் நடக்கும் உர்ஸ் திருவிழாவிற்கு, புனித போர்வை வழங்கி வருகிறார்.

ஆனால், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லும் தி.மு.க., அரசு, எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கிறது.

தர்காவில் உள்ள உண்டியல் வருமானத்தில், ஏழு சதவீதம், வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. இதில்தான் அந்த வாரியம் செயல்படுகிறது.

ஆனால், வாரியம் சிறுபான்மையின மக்களுக்கு தேவையான, அடிப்படை உரிமைகளை பெற்று கொடுக்காமல், அரசியல் சண்டையிடும் இடமாகி விட்டது.

வாரியத்துக்குள் உறுப்பினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல், உச்சக் கட்டத்தில் உள்ளது. வாரியத்துக்கு நிரந்தர முதன்மை செயல் அலுவலர் நியமிக்கவில்லை.

இதனால், வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும், அலுவல் கூட்டம் நடக்காமல், கோப்புகள் தேங்கி நிற்கின்றன. தற்போதுள்ள முதன்மை அதிகாரிக்கு, தமிழ் கலாசாரமோ, தர்கா, மசூதி கலாசாரமோ தெரியவில்லை.

இதனால், வாரியத்தில் முடிக்க வேண்டிய, பல பிரச்னைகள், நீதிமன்றத்துக்கு சென்று, பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், அவர்கள் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில்தான், ஹாஜி நியமனத்தில், சன்னி முஸ்லிம் மக்களுக்கு, தி.மு.க., அரசு பெரும் துரோகம் செய்து விட்டது.

அதாவது, தமிழக அரசின் தலைமை ஹாஜியாக இருந்த சலாஹுத்தீன் அய்யூப், கடந்த ஆண்டு மறைந்தார். புது ஹாஜியாக, வேலுார் உஸ்மான் முஹயித்தீனை, தி.மு.க., அரசு சமீபத்தில் நியமித்தது.

தலைமை ஹாஜி

இவர், சன்னி முஸ்லிம் வழிபாட்டுக்கு எதிரான மனநிலை கொண்ட, தாருல் உலுாம் தியோபந்த்தில் பட்டம் பெற்றவர். அவர் எப்படி சன்னி முஸ்லிம் வழிபாட்டுக்கு ஆதரவாக இருப்பார்.

இந்த நியமன பின்னணியில், தி.மு.க., கூட்டணியில் உள்ள, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., நவாஸ் கனி ஆகியோர் உள்ளனர்.

சன்னி வழிபாட்டை பின்பற்றும் நபர், ஹாஜியாக வந்துவிடக்கூடாது என, தலைமைச் செயலரை நேரடியாக சந்தித்து, அழுத்தம் கொடுத்துள்ளனர். இதை வெளிப்படையாக, தனது 'வாட்ஸாப்' குழுவில் ஜவாஹிருல்லா பதிவிட்டுள்ளார்.

இதன் வழியே, வக்ப் வாரியத்தை தொடர்ந்து, தலைமை ஹாஜி நியமனத்திலும், தி.மு.க., அரசு எங்களுக்கு எதிராக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

எனவேதான், தலைமை ஹாஜி சொல்லும், நோன்பு, பெருநாள் பிறை, மாத பிறை விஷயங்களை பின்பற்ற வேண்டாம் என, கடந்த மாதம் முடிவு செய்தோம்.

அதைத்தொடர்ந்து, தென்னிந்திய முக்கிய மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 'சன்னி முஸ்லிம் மக்களுக்கு எதிரான, மனநிலையில் இருந்து தி.மு.க., மாறவேண்டும்.

'இல்லையெனில், வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்டுவது' என, முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு, அனைத்து தர்காக்களுக்கும், மசூதிகளுக்கும் உத்தரவாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த தகவலை உளவுத்துறை வழியாக அறிந்த, தி.மு.க., தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us