தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஆளுக்கு ஒரு ஐபோன்; அள்ளிக்கொடுத்த நிறுவனம்

ஆளுக்கு ஒரு ஐபோன்; அள்ளிக்கொடுத்த நிறுவனம்

ஆளுக்கு ஒரு ஐபோன்; அள்ளிக்கொடுத்த நிறுவனம்


UPDATED : செப் 26, 2026 04:55 AM

ADDED : செப் 26, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 04:55 AM ADDED : செப் 26, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போலீசார் 100 பேர் முன்னிலையில் தில்லாவின் 'டிரெண்டிங்' திருமணம்



ஹ ரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த மைன்பால் தில்லா, 45, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளி. இவர் மீது, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கம்போடியாவில் சில காலம் தலைமறைவாக இருந்த தில்லா, அந்த நாட்டுப்பெண் ஒருவருடன் காதல் கொண்டார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

Image 1623131

' இன்டர்போல்' சிவப்பு நோட்டீஸ் காரணமாக தில்லாவை கைது செய்த கம்போடியா அரசு, இந்தியாவுக்கு நாடு கடத்தியது. சிறையில் இருக்கும் தில்லா, தனக்கும், கம்போடியா காதலிக்கும் திருமண ஏற்பாடு செய்தார். 12 மணி நேர பரோலில் வந்த அவர், 100க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் காதலியை திருமணம் செய்த நிகழ்வு, வலைதளங்களில், 'டிரெண்டிங்' ஆகி உள்ளது.

மாமியாருக்கு சபாஷ்!



உ .பி., முசாபர்நகரில் மகன் இறந்ததால் விதவையான, 31 வயது மருமகளுக்கு திருமணம் செய்து வைத்த மாமியாரின் செயல், வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Image 1623132

'திருமணம் செய்து கொடுத்தாலும், நாங்கள் மீனாட்சிக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்' என்கிறார், மாமியார் சுனிதா தேவி. மணப்பெண் குடும்பத்தினர் சார்பில் செய்ய வேண்டிய கன்னிகா தானத்தை, சுனிதா தேவியின் இளைய மகன் செய்தார். வலைதள பிரியர்கள் பலரும், மாமியார் சுனிதா தேவியின் செயலை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

பனியில் உருவான விநாயகர்; பக்கெட் தண்ணீரில் விசர்ஜனம்



ப னி படர்ந்த அன்டார்டிகா கண்டத்தில் ஆய்வுக்கு சென்றுள்ள இந்திய விஞ்ஞானிகள், அங்கு விநாயகர் சதுர்த்தி விழா நடத்திய நிகழ்வு, வலைதளங்களில் பரவி வருகிறது.

பனியை கொண்டு உருவாக்கிய விநாயகர் சிலைக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டி விஞ்ஞானிகள் வழிபட்டனர். விசர்ஜனம், இன்னும் சிறப்பாக இருந்தது. கரைப்பதற்கு பதிலாக பனி விநாயகரை ஆய்வு நிலையத்தில் தண்ணீர் இருக்கும் பக்கெட்டில் வைத்து விட்டனர். நேரம் செல்லச்செல்ல அந்த விநாயகர் சிலை, அப்படியே கரைந்து தண்ணீராகி விட்டது.

Image 1623134

'சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் விசர்ஜனத்தை அடுத்த கட்டத்துக்கு நாங்கள் கொண்டு சென்று விட்டோம். பனியில் உருவான விநாயகர் சிலை, சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. கணபதி பப்பா மோரியா' என்ற அவர்களது பதிவு, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆளுக்கு ஒரு ஐபோன்; அள்ளிக்கொடுத்த நிறுவனம்



மே ற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் மனித வள நிறுவனம் நடத்தும் இந்தியர் நிஷாத் ஹூசேன், தன் ஊழியர்களுக்கு ஆளுக்கு ஒரு கிப்ட் பாக்ஸ் பரிசளித்தார். அதில், பாதி பேருக்கு ஐபோன் இருந்தது; மீதி பேருக்கு சாக்லேட் தான் இருந்தது.

அப்போது அங்கு வந்த நிறுவன உரிமையாளரின் மனைவி ஹசீனா, சாக்லேட் கிடைத்தவர்களுக்கும் ஐபோன் வழங்கி, அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

'ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நேர்மறையான மனப்பான்மை, கூட்டு வலிமை ஆகியவற்றிலிருந்தே உண்மையான வெற்றி கிடைக்கிறது என்று நான் நம்புகிறேன். நாம் முன்னேறிச் செல்வதில் ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு பங்களிப்பும் முக்கிய பங்காற்றுகின்றன. நமது ஊழியர்களே நமது பலம்' என்ற ஹசீனாவை, வலைதளவாசிகள் மனதார பாராட்டுகின்றனர்.

ஜப்பான் கிரிக்கெட் அணியில் இந்தியர் அபிஷேக் ஆனந்த்



பீ ஹாரில் பிறந்த அபிஷேக் ஆனந்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், படிப்பும், காலமும் அவரை திசை மாற்றி அனுப்பி விட்டன.

Image 1623135

கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்து முடித்தவருக்கு ஜப்பான் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 2022ல் அங்கு சென்றவர் விடுமுறை நாட்களில் உள்ளூர் கிளப்களில் கிரிக்கெட் விளையாடினார். அவரது திறமையை கண்ட ஜப்பான் கிரிக்கெட் சங்கம், தேசிய அணியில் அவரை சேர்த்துக் கொண்டது.

சமீபத்தில் நடந்த இந்தியா - ஜப்பான் அணிகள் இடையிலான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 'வரும் காலத்தில் அந்த வாய்ப்பு அமையும். 2028 டி 20 உலகக்கோப்பை போட்டியை எதிர்பார்த்து இருக்கிறேன்' என, நம்பிக்கையோடு கூறுகிறார் ஆனந்த்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us