தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ நிதி வீணடிப்பு; கையாடல்; அலட்சியம்! உள்ளாட்சி தணிக்கையில் அம்பலம்

நிதி வீணடிப்பு; கையாடல்; அலட்சியம்! உள்ளாட்சி தணிக்கையில் அம்பலம்

நிதி வீணடிப்பு; கையாடல்; அலட்சியம்! உள்ளாட்சி தணிக்கையில் அம்பலம்

1


ADDED : செப் 26, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : செப் 26, 2026 05:23 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநகராட்சி, பல்வேறு நகராட்சிகள் மற்றும் பல்கலைகளில் நிதி வீணடிப்பு, கையாடல் நடந்திருப்பது, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில், 2024- - 25ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தணிக்கை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைகளில், 2024- - 25-ம் ஆண்டுக்கான தணிக்கையில், 6,770 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.82 லட்சம் நிதி ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. ஆனால், வெறும் 1.28 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. நிதி வீணடிப்பு, அலட்சியம், கையாடல் நடந்திருப்பது, தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் 86.24 கோடி; பல்கலைகளில் 43.82 கோடி; மாவட்ட மார்க்கெட் கமிட்டியில் 26.83 கோடி; உள்ளாட்சி திட்ட குழுமத்தில் 6.12 கோடி ரூபாய் என, மொத்தம் 163 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு


சென்னை மாநகராட்சியில் திறந்தவெளி டெண்டர் இல்லாமல், விதிகளை மீறி, 20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. துப்புரவு பணியாளர்களாக வேலைக்கு எடுத்து, அவர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தியதால் 4.12 கோடி ருபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட உர மையங்களுக்கு பராமரிப்பு செலவு செய்ததாக கணக்கு காட்டி 2.12 கோடி ரூபாய், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை தவிர பிற மாநகராட்சிகளில், வணிக நிறுவனங்களிடமிருந்து, குறைவான அளவில் குடிநீர், பாதாள சாக்கடை வரி கட்டணம் வசூலித்ததால், 38.96 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம் மாநகராட்சியில் மட்டும், 32.49 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலுார் மாநகராட்சியில், ஒப்பந்த பணியாளர்களின் பி.எப்., தொகையை செலுத்தாமல், போலி சலான் பயன்படுத்தி, 3.22 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்களுக்கு, வாடகை பிடிக்காததால், 7.66 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 60 நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு, வரிவிலக்கு இருந்த போதும், ஜி.எஸ்.டி., செலுத்தியதன் வாயிலாக, 14.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சிகளில், 'அம்ருத் குடிநீர் 2.0' திட்டத்தில், தரமில்லாத குழாய்களை பொருத்தியதால், 3.86 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வழியே வசூலிக்கப்பட்ட, 3.99 கோடி ரூபாய் அரசு கணக்கில் சேர்க்கப்படவில்லை. அண்ணாமலை பல்கலையில், ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா என சரிபார்க்காமல், 19.64 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

மீட்க வேண்டும்


தணிக்கை அறிக்கையின்படி, 2024 - --25-ம் நிதியாண்டில், நிர்வாக அலட்சியத்தால், சென்னை மாநகராட்சியின் வருவாய் பற்றாக்குறை 863 கோடி ரூபாயாக உள்ளது. நகராட்சிகளில் கடன் பொறுப்பு 1,699 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிதி தொடர்பான தவறுகளுக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அரசு நிதியை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us