தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சிலைகளை மீட்பதில் பிரதமர் தீவிரம்!

சிலைகளை மீட்பதில் பிரதமர் தீவிரம்!

சிலைகளை மீட்பதில் பிரதமர் தீவிரம்!


ADDED : நவ 01, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சோழ பேரரசர் ராஜேந்திர சோழர் காலத்து ஆனைமங்கல செப்பேடுகள், ஐரோப்பிய நாடான நெதர்லாங்தில், லெய்டன் பல்கலையில் வைக்கப்பட்டிருந்தன. இரு நாடுகளின் தீவிர ஆலோசனைக்கு பின், இந்த அரிய செப்பேடுகள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் மே மாதம் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன் இந்த செப்பேடுகளை அளித்தார். இவை, தற்போது டில்லியில் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ளன. விரைவில், தமிழகத்திற்கு இந்த செப்பேடுகள் அனுப்பப்படும்.

இதையடுத்து, தென் மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறார் பிரதமர் மோடி. ஜூலையில் அவர் ஆஸ்திரேலியா சென்றபோது, ஆறு தலை சுப்ரமணிய சுவாமி, பத்ரகாளி திரிசூலம், ராஜேந்திர சோழன் காலத்து நந்தி சிலை ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து, 1,204 சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவை போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன.

இப்படி வெளிநாடுகளில் உள்ள நம் நாட்டின் சிலைகளை மீட்பதற்காக, மத்திய அரசின் பல்துறை கூட்டுக்குழு செயல்படுகிறது. உள்துறை, வெளியுறவு மற்றும் கலாசார அமைச்சக அதிகாரிகள் இக்குழுவில் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்குழுவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறாராம் பிரதமர் மோடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us