அதிகரிக்கும் போக்சோ வழக்குகள் மார்ச் 26ல் பி.டி.ஏ., கூட்டம்
அதிகரிக்கும் போக்சோ வழக்குகள் மார்ச் 26ல் பி.டி.ஏ., கூட்டம்
ADDED : மார் 16, 2025 12:46 AM

சமீபமாக பள்ளி மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியர், மாணவர் என, போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதனால், மாணவியர் பாதுகாப்பை பலப்படுத்த, மார்ச், 26ல் அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: பாலியல் தீங்குகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, குழந்தைகளிடம் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து, மாணவர்கள், பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பான, ஆதரவான சூழலை உருவாக்குவது, மாணவர்களிடம் ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து, ஆசிரியர்கள், பெற்றோர் எடுக்க வேண்டிய நடவடிக்கை, பள்ளியில் உள் புகார் குழு அமைத்தல், மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைத்து, ஆண்டுதோறும் உறுப்பினர்களை மாற்றி அமைத்தல் குறித்து, மார்ச், 26ல் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்
- நமது நிருபர் -.