தனியார் பஸ் சேவை முடக்கம்: 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தனியார் பஸ் சேவை முடக்கம்: 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
UPDATED : அக் 28, 2026 05:43 AM
ADDED : அக் 28, 2026 05:32 AM

திருச்சி: தி.மு.க., ஆட்சியில், டவுன் பஸ்களில், மகளிருக்கு 'விடியல் பயணம்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து வகையான பஸ்களிலும், மகளிர் இலவசமாக பயணிக்க, 'வெற்றி பயணம்' என்ற திட்டத்தை அமல்படுத்தியது.
இதனால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, நஷ்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனியார் பஸ்களுக்கு, 50 சதவீதம் வருவாய் குறைந்துள்ளதோடு, பஸ் உரிமையாளர்கள், தினமும் 2,000 ரூபாய் கையில் இருந்து செலவு செய்கின்றனர்.
தனியார் பஸ் நிறுவனங்களை சார்ந்து, டிரைவர், கண்டக்டர், கிளீனர் என, நேரடியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள், மெக்கானிக், பஸ் பாடி தொழிலாளர்கள், பெட்ரோல் பம்ப் தொழிலாளர்கள், பெயின்டர்கள் என, மறைமுகமாக, 2.5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
வெற்றி பயண திட்டதால், தனியார் பஸ் வருவாய் குறைந்துள்ளதால், 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக அரசின் திட்டத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்க்கவில்லை. அந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், அதே துறையை சார்ந்த மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும். அரசு முதலில், வெற்றிப்பயணம் திட்டத்தின் பயனாளிகளை தகுதி அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும்.
ஒரு வழித்தடத்தில் 30 சதவீதம் வரை மட்டுமே இலவச பஸ்களை இயக்க வேண்டும். பயணத்துக்கான தொலைவை, அதிகபட்சம், 40 கி.மீ.,யாக நிர்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தனியார் பஸ் இயக்கத்தை காப்பாற்ற முடியும்.
