தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க.,வின் வழி இனி தனி வழி தான்..: அந்துமணி பதில்கள்

தி.மு.க.,வின் வழி இனி தனி வழி தான்..: அந்துமணி பதில்கள்

தி.மு.க.,வின் வழி இனி தனி வழி தான்..: அந்துமணி பதில்கள்

3


UPDATED : அக் 17, 2026 07:07 AM

ADDED : அக் 16, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : அக் 17, 2026 07:07 AM ADDED : அக் 16, 2026 08:24 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லை குரலோன், தென்காசி:

'உலகம் தீர்வை தேடுகிறது. அந்த தீர்வை அளிக்கும் வல்லமை, இளைஞர்களிடம் உள்ளது...' என்று பக்குவமாக சொல்கிறாரே பிரதமர் மோடி?

அவர், இளைஞர்களின் ஆற்றலை புரிந்து கொண்டுள்ளார். அவர்களின் திறமையை ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்தி, நாட்டை வளர்க்க இளைஞர்கள் உழைக்க தயாராக வேண்டும்.

எம்.பி.தினேஷ், கோவை:

தமிழக முதல்வர் விஜயின் ஆங்கில புலமையைக் கண்டு வியந்து பாராட்டுகிறாரே, ப.சிதம்பரம்?

தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, தனக்கும், தன் மகனுக்கும் மட்டும் தான் தெரியும் என்ற நினைப்பில் இருந்த சிதம்பரத்துக்கு, விஜயின் பேச்சு சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. துண்டுச் சீட்டு அரசியல்வாதிகள் மத்தியில் விஜய் வித்தியாசமாக தெரிவதால், பாராட்டுகிறார் சிதம்பரம்; வரவேற்போம்!

மை.ஜான் பாண்டியன், துாத்துக்குடி:

தமிழக முழுநேர கவர்னராக ராஜேந்திர அர்லேகர் நியமனம்?

தி.மு.க.,வினருக்கு வசதியாகி விடும். யார் மீது வழக்கு பதிந்தாலும், கவர்னர் அனுமதி பெற்றீர்களா என, கேட்க ஆரம்பிப்பர். அவர்களுக்கு, கவர்னர் மீது அத்தனை மரியாதை அல்லவா?

ஜி.கோகுல கிருஷ்ணன், திருவாரூர்:

'அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டங்களுக்கு யாரிடமும் வசூலிக்க கூடாது?' என, அரசு அறிவித்துள்ளதே?

வியாபாரிகளும், வணிகர்களும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.

தக்கலை லீலாராம், கன்னியாகுமரி:

'இண்டி கூட்டணியில் இனி நாங்கள் இல்லை. இனி தனி வழி தான்...' என்று தி.மு.க., சொல்லி இருக்கிறதே?

பாதாளத்திற்கு செல்லும் வழியை தான் கூறி இருக்கும்!

கி.பாலமுருகன், ராமநாதபுரம்:

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கி கப்பல், ஐ.என்.எஸ் மங்ரோல் கடற்படையில் பலம் சேர்த்துள்ளதே!

நம் பிரதமர் மோடியின் மிளிரும் பாரதம், கடல் அடியிலும் ஒளி வீசுகிறது பாலமுருகன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us