ADDED : நவ 28, 2025 04:35 AM

காரைக்குடி: காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய் வழங்குகின்றனர். ஆனால், மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டால் ஒரு ரூபாய் கூட இல்லை.
தேர்தல் நெருங்குவதால், வரும் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கூட வழங்குவார்கள். துாண்டிலில் மாட்டிய மீன் போல, திராவிடர்களிடம் தமிழர்கள் சிக்கி உள்ளனர்.
குறுக்கே அணில் ஓடினாலும், பொறுமையாலும், பெருந்தன்மையாலும் வென்று காட்டுங்கள். நாம் தமிழர் கட்சிக்கு 4 லட்சமாக இருந்த ஓட்டு, 40 லட்சமாக உயர்ந்துள்ளது. மாடுகளுக்கும், மலைக்கும் ஆறுக்கும் மாநாடு என்றால் சிரிக்கிறார்கள்.
என்னை, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், மான் கறி ஊறுகாய் சாப்பிட சொன்னார். நான் தயங்கினேன். சாப்பிட கூட பயப்படுவதாக அவர் கூறியதால், நான் சாப்பிட்டேன்.
திருச்சியில் வரும் பிப்., 7ம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடக்கிறது. அதில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

