sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காங்.,கை காட்டி 'சீட்' கேட்கும் வி.சி., - கம்யூ.,க்கள்: தி.மு.க., தொகுதி பங்கீடு குழு நெத்தியடி பதில்

/

காங்.,கை காட்டி 'சீட்' கேட்கும் வி.சி., - கம்யூ.,க்கள்: தி.மு.க., தொகுதி பங்கீடு குழு நெத்தியடி பதில்

காங்.,கை காட்டி 'சீட்' கேட்கும் வி.சி., - கம்யூ.,க்கள்: தி.மு.க., தொகுதி பங்கீடு குழு நெத்தியடி பதில்

காங்.,கை காட்டி 'சீட்' கேட்கும் வி.சி., - கம்யூ.,க்கள்: தி.மு.க., தொகுதி பங்கீடு குழு நெத்தியடி பதில்

7


ADDED : மார் 16, 2026 06:11 AM

Google News

7

ADDED : மார் 16, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

தி.மு.க., கூட்டணியில், மற்ற கட்சிகளுக்கு அதிக 'சீட்' கொடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, தங்களுக்கும் கூடுதல் 'சீட்' ஒதுக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு, மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீட்டை சுட்டிக்காட்டி, தி.மு.க., தொகுதி பங்கீடு குழு பதிலளித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது.

கடந்த முறையை விட, கூடுதலாக மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதிதாக கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கும் கூடுதல் 'சீட்' ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்களுக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அடம் பிடித்து வருகின்றன.

ஆனால், கடந்த முறை ஆறு தொகுதிகளை கேட்டு வாங்கி, அதில் இரு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றன என்பதால், இம்முறை தொகுதிகள் குறைக்கப்படுவதாக தி.மு.க., தரப்பு கூறியது. அதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏற்க மறுத்துள்ளன. கூடவே, அடுத்த கட்டமாக பேச்சு நடத்த வராமல், கண்ணாமூச்சி ஆடி வருகின்றன.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தலா 7 இடங்கள் கேட்கின்றன. தி.மு.க., தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தொகுதி பங்கீட்டை சுட்டிக்காட்டி, தி.மு.க., பதிலடி கொடுத்துள்ளது.

இதேபோலவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இம்முறை கூடுதல் தொகுதிகள் எதிர்பார்ப்பதால், அவர்களுக்கும் சேர்த்தே, தி.மு.க., பதிலடி கொடுத்து வருகிறது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., பக்கம் போகாமல் இருப்பதற்காகவே, காங்கிரசுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டன. மாற்று அணி பக்கம் செல்லாமல் இருக்கவே, தே.மு.தி.க.,வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கடந்த 2016 தேர்தலில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை, தே.மு.தி.க, தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைத்தன. அந்த அணியில், தே.மு.தி.க., 124 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற நான்கு கட்சிகளும் 110 தொகுதிகளில் போட்டியிட்டன.

அப்போது, தே.மு.தி.க.,வை தலைமையாக ஏற்று, அக்கட்சிக்கு கூடுதல் சீட்களை ஒதுக்கிக் கொடுக்க முன் வந்த கட்சிகள், இப்போது தி.மு.க.,விடம் முரண்டு பிடிக்கின்றன.

இழுபறி இருந்தாலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இதேபோல், வி.சி.,யும் விரைவில் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us