sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'பாலாற்றில் குப்பை கொட்டுவதே நாங்கள் தான்': வேலுார் மாநகராட்சி தி.மு.க., மேயர் ஒப்புதலால் சர்ச்சை

/

'பாலாற்றில் குப்பை கொட்டுவதே நாங்கள் தான்': வேலுார் மாநகராட்சி தி.மு.க., மேயர் ஒப்புதலால் சர்ச்சை

'பாலாற்றில் குப்பை கொட்டுவதே நாங்கள் தான்': வேலுார் மாநகராட்சி தி.மு.க., மேயர் ஒப்புதலால் சர்ச்சை

'பாலாற்றில் குப்பை கொட்டுவதே நாங்கள் தான்': வேலுார் மாநகராட்சி தி.மு.க., மேயர் ஒப்புதலால் சர்ச்சை

3


ADDED : பிப் 08, 2026 05:57 AM

Google News

3

ADDED : பிப் 08, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: ''வேலுார் பாலாற்றில் நாங்கள் தான் குப்பையை கொட்டி பாழாக்குகிறோம்,'' என, மாநகராட்சி தி.மு.க., மேயர் சுஜாதா பேசியது, மாநகராட்சியே ஆற்றை பாழாக்கி வருவதை அம்பலப்படுத்தி உள்ளது.

வேலுார் மாநகராட்சியில், நான்கு மண்டலங்கள், 60 வார்டுகள் உள்ளன. தினமும், 240 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன.

குப்பை கழிவுகள் 50 நுண் உரமாக்கும் மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்படுகின்றன. மாநகராட்சியின் முக்கிய குப்பை கிடங்கான சதுப்பேரி கிடங்கு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டை ஏற்படுத்தியதால், 2018ல் மூடப்பட்டது.

இதனால், மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை அதிகளவில் பாலாற்றில் கொட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பாலாறு மாசடை ந்து வந்தது. ஆனால், வேலுார் மாநகராட்சி குப்பை, பாலாற்றில் கொட்டப்படுவதில்லை என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, 2026 ஜனவரியில், தன்னார்வலர்கள் இணைந்து, பாலாற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இந்நிலையில், வேலுாரில் பிப்., 5ல் 'உங்கள் கனவை சொல்லுங்கள், வேலுார் மாவட்ட தொலை நோக்கு திட்டம் - 2030' நிகழ்ச்சி நடந்தது.

இதில், வேலுார் மாநகராட்சி தி.மு.க., மேயர் சுஜாதா பேசுகையில், ''குஜராத் மாநிலம் ஆமதாபாதில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கின்ற னர். இந்த திட்டத்தை வேலுாருக்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்தால் பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்கலாம்.

''பாலாற்றில் நாங்கள் தான் குப்பை கொட்டுகிறோம். ஏனென்றால் வேறு இடமில்லை. வேலுார் மாநகராட்சி சிறிய ஊர். அதனால், குப் பையை கையாள முடியவில்லை. எனவே, கலெக் டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பாலாற்றில், மாநகராட்சி குப்பை கொட்டப்படுவதில்லை என, இதுவரை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் மேயரே, 'நாங்கள் தான் ஆற்றில் குப்பை கொட்டுகிறோம்' என, ஒப்புதல் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்ரமணியன் கூறியதாவது:


பல கோடி ரூபாய் வரி வசூலித்தும், 'ஸ்வச் பாரத் திட்டம்' மூலம் பல கோடி ரூபாய் நிதி பெற்றும் கூட, எங்களால் கழிவு மேலாண்மையை செய்ய முடியவில்லை என்று கூறுகின்றனர். எந்த அடிப்படையில் இவர்கள் குப்பை வரி உட்பட வரிகளை வாங்குகின்றனர். வெறுமனே குப்பையை கொண்டு போய் பாலாற்றில் கொட்டுவதற்காக, பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

ஏதாவது ஒரு இடத்தை ஊருக்கு வெளியே தேர்வு செய்து, அங்கு குப்பை மேலாண்மை திட்டத்தை அமைப் பதற்கான நிதியை தமிழக அரசிடம் கேட்டு பெற்றிருக்கலாம். வேலுார் மாநகராட்சி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த மாவட்டம்.

சொந்த தொகுதி என்று கூட சொ ல்லலாம். அவரது மகன் தான் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். மத்திய அரசி டம் கோரிக்கை வைத்து, குப்பை மேலாண்மை திட்டத்திற்கு நிதி பெற்று இருக்கலாம். ஆனால், செய் யவில்லை. இந்த குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த போர்க்கால அ டிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us