பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்
பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்
ADDED : டிச 31, 2025 04:52 AM

கொல்கட்டா: மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி, காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை நடத்தியது யார் என பதிலடி தந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2011 முதல் மம்தா தொடர்ந்து ஆட்சியில் உள்ளார். தமிழகத்துடன் சேர்த்து, மேற்கு வங்கத்துக்கும் வரும், ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், திரிணமுல் மற்றும் பா.ஜ., இப்போதே பிரசாரத்தை துவக்கிவிட்டன.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ள, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, கொல்கட்டாவில் நேற்று பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

