தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/இளம் நடிகர்களுக்கு ரஜினி எப்போது வழி விடுவார்?: அந்துமணி பதில்கள்

இளம் நடிகர்களுக்கு ரஜினி எப்போது வழி விடுவார்?: அந்துமணி பதில்கள்

இளம் நடிகர்களுக்கு ரஜினி எப்போது வழி விடுவார்?: அந்துமணி பதில்கள்

11


ADDED : நவ 10, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : நவ 10, 2026 06:06 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.தீரன், கோவை:

ஈ.வெ.ரா., பெயரிலான கோவை நுாலகத்தில் இவ்வளவு பெரிய ஊழல் நடக்கலாமா?



தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமாவது ஊழல் இல்லாமல் முடிக்கப்பட்டது என்றால் தான் ஆச்சரியம். அதுவும் நாலடியார் என்பது ஒரு நுால் என்று கூட தெரியாமல், எழுத்தாளர் என்று நினைத்து அவரை, 'மானே, தேனே...' என, உலக மகா புகழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளதை பார்த்து ஊரே சிரிக்கிறதே... மற்ற புத்தகங்களும் இதே நிலையில் தானே இருக்கும்!

ஜி.நாராயணன், தஞ்சாவூர்:

'எல்லையில் துப்பாக்கி சூட்டை தாண்டி, எதிரிகள் உருவாக்கும் புதிய வகை போரை எதிர்கொள்ள நம் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்' என்று நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளாரே?



இந்திய - சீன எல்லைகளில் ஒன்றான, சிக்கிம் மாநிலத்தில் உள்ள நதுல்லாவில் பேசிய ராஜ்நாத் சிங், 'செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., உட்பட பல வகை புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன், எதிரிகள் நம்மை தாக்க நினைத்தாலும், நம் ராணவ வீரர்களின் தைரியமும், அர்ப்பணிப்புமே நம் நாட்டை பாதுகாக்கிறது' என்று பேசியுள்ளார்.

நம் பாரத பிரதமர் மோடியும், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்த நிம்மதியுடன், நம் எல்லை பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடி உள்ளார். மாநில முதல்வர்களும், மோடி, ராஜ்நாத் சிங் போன்றோரை போல், தங்கள் ஊரில் உள்ள ராணுவத்தினர் மற்றும் காவலர்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

வி.பிரேமலதா, கொச்சி, கேரளா:

இந்தியாவிலேயே கோவாவின் 'மிஷன் ரேபிஸ்' முயற்சி, பெருமளவிலான தடுப்பூசி திட்டங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இதை தமிழகமும் பயன்படுத்திக் கொண்டு, தெரு நாய் பிரச்னைகளுக்கு தீர்வு காணுமா?



'மிஷன் ரேபிஸ்' என்ற தொண்டு நிறுவனம், 2019ல் ஆரம்பித்து 2025 வரை கோவா மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சாலையில் திரிபவை, வீட்டில் வளர்க்கப்படுபவை என மொத்தம், 10,025 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி, போட்டு கோவா மாநிலத்தை வெறி நாய் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளது. மும்பையிலும் இந்நிறுவனம் களப்பணியாற்றி வருகிறது. தமிழகத்தில், மாநில அரசு இந்த அமைப்பை தொடர்பு கொண்டு ஆவன செய்தால், மிக மிக நல்லது!

ஆர்.பிரதீபன், கூடுவாஞ்சேரி:

சினிமா உலகில் இளம் நடிகர்களுக்கு நடிகர் ரஜினி எப்போது வழி விடுவார்?



'பல் இருப்பவர் பக்கோடா சாப்பிடுவார்' எனும் சொலவடை போல், அவருக்கு மார்க்கெட் இருக்கிறது; நடிக்கிறார். பல இளைஞர்களும் சாதிக்கின்றனரே... அவர்களையும் ரஜினி மனம் திறந்து பாராட்டுகிறாரே... அதை நீங்கள் கவனிப்பதில்லையா பிரதீபன்?

ஆர்.வித்யா, சென்னை:

'குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் அவசியம், அ.தி.மு.க.,வுக்கு இல்லை...' என்று, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் சொல்கிறாரே?



ஆட்சியை பிடிக்கவே முடியாது என்பது, உதயகுமாருக்கு நன்றாகவே தெரியும். அதனால் இப்படி, 'பிட்' போடுகிறார். கீழே விழுந்தாலும், அவர் மீசையில் மண் ஒட்டவில்லையாம் வித்யா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us